*1.அடடா... என்ன சிறப்பு!
ரஞ்சனின் அப்பா, வேடிக்கையான புதிர்கள் போடுவதில் வல்லவர். அவர் இரு மலையாளி. ரஞ்சனின் அம்மா தமிழர். ஒருநாள் சாப்பாட்டு நேரத்தில், ரஞ்சனிடம் குறும்பாக ஒரு புதிர் போட்டார். "இந்த SIR-க்கு இல்லாத சிறப்பை உன் அம்மாவான MADAM பெறுகிறார். அம்மாவின் தமிழுக்கு இல்லாத சிறப்பை என் MALAYALAM பெறுகிறது. எந்த வகையில்?" என்று கேட்டார்.
ரஞ்சன் யோசித்தான். நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.
*2. வயதைக் கண்டுபிடி!
வாக்காளர் பெயரைச் சரிபார்க்க வந்த அலுவலர், "உங்கள் வீட்டில் எத்தனை பேர்? வயது என்ன? என்று கேட்டார். "நானும் என் அப்பாவும். என் பெயர் சீதா. என் அப்பா பெயர் கோவிந்தன். எங்கள் வயதைப் புதிராகச் சொல்கிறேன். இரண்டு இலக்க எண்தான் என் வயது. இரண்டும் ஒரே எண். இரண்டும் கூடினால், 'நதி.' என் முதல் எண்ணை, இரண்டாலும் அடுத்த எண்ணை, மூன்றாலும் பெருக்கி, அதைச் சேர்த்து எழுதினால், அப்பாவின் வயது" என்றார். அலுவலர் வயதைக் கண்டுபிடித்துவிட்டார். நீங்கள்?
* 3.என்ன உடை ?
அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா, மறுநாள் நடக்க இருந்தது. அன்று, யார் யார் எந்த விதமான உடையில் வரப்போகிறார்கள் என்பது பற்றிப் பேச்சு வந்தது.
ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு உடை பற்றிச் சொல்ல, ஷங்கர் அமைதியாக இருந்தான். "உன் டிரெஸ் பற்றி எதுவும் சொல்லவில்லையே" என்று கேட்டார்கள். "க்ளூ கொடுக்கிறேன். கண்டுபிடியுங்கள். முதல் மூன்று எழுத்துகள் சுமையைக் குறிக்கும். அடுத்த இரண்டு எழுத்துகள் குதியையைக் குறிக்கும்" என்றான்.
அது என்ன உடை?
விடைகள் :
1. MADAM, MALAYALAM. ஆங்கிலத்தில் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் படிக்கல்லாம்.
2. இரண்டு இலக்க எண். இரண்டும் ஒரே எண். இரண்டும் கூடினால் நதி = 3+3 = 6. ( ஆறு ). 3X2 = 6, 3X3 = 9. சேர்த்து
எழுதும்போது 69.
3. ஷங்கர் சொன்ன பதில் : 'பாரம்பரிய' உடை.
-- அருணா எஸ்.சண்முகம்.
-- சுட்டி விகடன். 28-02-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.

No comments:
Post a Comment