பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.
"நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் குடிப்ப்வர்களுக்கு 200 டாலர் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு 200 டாலர் தர வேண்டும். சவாலுக்கு தயாரா?" என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
"பந்தயத்துக்கு நான் தயார்," என்றார்.
அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, "ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?" என்று கேட்டார்.
"பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்." என்றார் அவர்.
இதைப்போன்ற குடிகாரர்கள் ஓய்வுக்காகவா குடிக்கிறார்கள்?
-- ஜாலிக்காக குடிக்கலாமா? NO ! ( மது அருந்துதல் பற்றி சத்குருவின் பதில்கள் தொடரில் ).
-- சத்குரு ஜக்கி வாசுதேவ்.
-- ஈஷா காட்டுப்பூ . பிப்ரவரி 2014.

No comments:
Post a Comment