சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம், 1977-ல் கட்டப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களால் 1994-ல் பார்வையாளர்கள் மேலே சென்று பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. 20 வருடங்கள் கழித்து, நவம்பர் 2013 முதல் மீண்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் இது நான்காவதாகக் கட்டப்பட்ட லைட் ஹவுஸ், 1796-ல், ஜார்ஜ் கோட்டையில் முதல் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. அடுத்து, 1844-ல் பூக்கடை பகுதியில் 161 அடி உயரத்தில் கட்டினாங்க. 1894-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் 175 அடிகள் உயரத்தில் விளக்கு அமைச்சாங்க. அதன்பிறகு, 1977-ல் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. மொத்தம் 10 தளங்கள். 242 படிக்கட்டுக்கள்.
இந்தியாவில் லிப்ட் வெச்சுக் கட்டப்பட்ட முதல் கலங்கரை விளக்கம் இதுதான்.
-- வி.எஸ்.சரவணன், ஜெ.பி.ரிவி, கு.அபிநயா.
-- சுட்டி விகடன். 15-01-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.
No comments:
Post a Comment