Tuesday, November 11, 2008

'ஹேண்ட்பால்'

ஹேண்ட்பாலின் வரலாறு சுவாரஸ்யமானது.ஜெர்மனி உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் உருவாக்கிய விளையாட்டு இது. 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டைச் சேர்க்கவேண்டும் என்ற போது, "வேண்டாம்" என்று ஒரே வார்த்தையில் மறுத்திருக்கிறார் சர்வாதிகாரி ஹிட்லர். 'ஒரே ஒரு முறை இந்த விளையாட்டை நேரில் பாருங்கள்' என்று கெஞ்சிக்கூத்தாடி, அவரை பார்க்க வைத்திருகிறார்கள் அதிகாரிகள்.ஹேண்பாலின் வேகத்தைப்பார்த்த தும் அசந்து போன ஹிட்லர், 'இந்த விளையாட்டு உடல் திறன் அதிகரிக்கும். உடனே ஒலிம்பிக்கில் சேருங்கள் !' என்று அனுமதி கொடுத்துள்ளார். அதோடு, தனது ராணுவத்தினர் ஓய்வு நேரங்களில் விளையாடுவதற்காக ஹேண்ட்பாலைக் கற்றுக்கொடுக்கவும் உத்தரவு இட்டு இருக்கிறார்.ஹிட்லரையே ஈர்த்ததால்,'அப்படி என்னதான் இருக்கிறது இந்த விளையாட்டில் ?' என்ற ஆர்வம் கிளம்பி , பல ஐரோப்பிய நாடுகளில் பரவியது ஹேண்ட்பால். இந்தியாவில் 1970 வாக்கிலேயே ஹேண்பால் அறிமுகமானாலும் 2003 வரை இப்படி ஒரு விளையாட்டு இருப்பது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. பின்னர், பல்கலைக் கழக மாணவரிடையே ஹேண்ட்பால் பரவிபோட்டிகள் நடக்க ஆரம்பித்தன.
பெரும்பாலும் பன்னிரண்டாவது வயதில்தான் எலும்புகள் வலுவடையும். அந்த வயதிலேயே ஹேண்ட்பால் கற்றுக்கொள்ளத் துவங்கினால் நிச்சயம் எதிர்காலத்தில் சிறந்த பிளேயராக உருவாகலாம்.
--ஆனந்தவிகடன். ( 26-11-2008 ).

No comments: