அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ,1877-ம் ஆண்டு நவம்பர் 21 -ல் தனது கிராமபோன் கண்டுபிடிப்பை முறைப்படி அறிவித்தார்.
அமெரிக்காவில் 1847-ம் ஆண்டு பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன், நவீன உலகுக்கு தந்த கொடைகள் ஏராளம்.
எடிசன் கண்டுபிடிப்புகளுக்கு மூல காரணமாக இருந்தது சிறு வயதில் அவர் பார்த்த டெலிகிராப் ஆபரேட்டர்வேலைதான். இதுதான் அவரை பல கண்டுபிடிப்புகளுக்கு உந்தித்தள்ளியது. புதுப்புது ஆராய்ச்சிகளுக்காக நியூஜெர்சி நகரில் அவர் பிரத்யேகமான ஆய்வுக் கூடத்தை அமைத்திருந்தார்.
தந்தி தொழில் ட்பம் மூலம் ஒலியை பதிவு செய்து பிறகு அதே ஒலியை மறு ஒலிபரப்பு செய்யும் ஆராய்ச்சியை அவர் 1870 களில் செய்து வந்தார்.தகர இழைகள் சுற்றப்பட்ட உருளையைக் கொண்டு ஒலியை பதிவு செய்ய முயற்சித்தார்.
1877-ம் ஆண்டு ஆய்வுக் கூடத்தில் தனது தொழிலாளி குரேசி என்பவரை உருளையை சுற்றச் சொல்லிவிட்டு, எடிசன் ஒரு பாடல் பாடினார் . சிறிது நேரம் கழித்து கருவியை இயக்கிய போது அதே பாடல் ஒலிபரப்பானது. இதைப் பார்த்த எடிசனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
இது குறித்து பின்னாளில் அவர் கூறும்போது,'புது கண்டுபிடிப்பு ஒன்று வெற்றியடையும் போது எனக்கு உடனடியாக ஏற்படுவது பயம்தான்' என்றார்.எடிசனின் ஒலிப்பதிவு கருவியைப் பார்த்து நியூஜெர்சி நகரமே அதிசயித்தது.
மற்ற கருவிகள் கண்டுபிடிப்பினால் கிடைத்தது போன்று கிராமபோன் கண்டுபிடிப்பில் எடிசனுக்கு பணம் கிடைக்கவில்லை. எனினும், இசை உலகில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கிராமபோன் கண்டுபிடித்தவர் என்ற அழியாப் புகழுக்கு எடிசன் சொந்தக்காரரானார்.
--தினமலர் ( 21-11-2008 ). .
No comments:
Post a Comment