கூவம் நதி சென்னைலில் இருந்து 72 கி.மீ., தொலைவில் அரக்கோணம் தாலுகா தக்கோலம் கிராமத்துக்கு அருகே கேசவரம் அணைக்கட்டில் துவங்குகிறது .
புறநகர் பகுதிகளில் கூவம் நதியில் ஆரண்வயல் அணைக்கட்டு , கொரட்டூர் அணைக்கட்டு , கண்ணன்பாளையம் அணைக்கட்டு , ஆயலசேரி அணைக்கட்டு , பருத்திப்பட்டு அணைக்கட்டு ஆகியவை கட்டப்பட்டுள்ளன .
கூவத்தின் துணை வடினிலங்களில் மொத்தம் 82 குளங்கள் உள்ளன . 13,575,93 எக்டேர் ஆயக்கட்டு கொண்டது . வளைந்து நெளிந்து வந்து பல வடிகால்களை ஏற்று , சென்னை நகர எல்லையான கோயம்பேட்டில் கூவம் நதி நுழைகிறது .
அங்கிருந்து சென்னை நகருக்குள் 17.98 கி.மீ. தூரம் பயணிக்கிறது . இடையில் 16 பாலங்களை கடந்து , நேப்பியர் பாலத்துக்கு கீழே கடலில் வந்து சேறுகிறது .
அதற்கு முன்பாக , லாஸ் பாலத்தில் இரண்டாக கூவம் பிரிந்து மீண்டும் நேப்பியர் பாலத்தில் ஒன்று சேருவதால் , அங்கு தீவுத்திடல் அமைந்துள்ளது .
கூவம் நதியின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து ஏராளமான குடிசைப் பகுதிகள் அமைந்து உள்ளதால் கூவத்தின் உண்மையான அகலம் மூன்றில் இரண்டு மடங்காக குறைந்துள்ள்து .இதன் காரணமாக , கூவம் நிரம்பி வழிந்து பக்கிங்காம் கால்வாய் , ஒட்டேரி போன்ற சிறு நீர்வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன .
இதனால் சாக்கடை தண்ணீரின் தொடர்புகளும் அடைபடுகின்றன . இது தவிர , கடலில் கலக்கும் நுழைவாயிலில் மன் அடைப்பு அதிகரிப்பதால் , தண்ணீர் செல்வது தடைபடுகிறது .
இந்த நிலையில் தேம்ஸ் நதி போல் கூவம் மாறுமா ? அல்லது தொடர்ந்து நாறுமா ?.
-- தினமலர் .சென்னை பதிப்பு . ( 06-10-2008 ) .
No comments:
Post a Comment