இந்திய சுதந்திரத்துக்கு தன் பாடல்களால் வேகம் ஊட்டிய முண்டாசு கவிஞன் பாரதியின் பேச்சுகளும் . உணர்ச்சிமிக்கதாய் இருக்கும் . தனது அழியாத பாடல்களால் தமிழ் மக்கள் மனதில் ,கி
மட்டுமல்லாமல் , இந்திய அளவில் தேசியக் கவிஞர் பெயருடன் இன்று வரை வாழ்ந்து வருகிறார் பாரதியார் . சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் , பல பொதுக் கூட்டங்களில் பேசிய
பாரதி , அந்த வகையில் கடந்த 1921 , ஆகஸ்டில் ஈரோட்டுக்கு வந்தார் . கருங்கல்பாளையம் நூலகத்தில் ' மனிதனுக்கு மரணமில்லை ' என்ற தலைப்பில் பாரதியார் உணர்ச்சிமிகு உரையாற்றினார் . அதன் பிறகு சென்னை சென்ற அவர் , அதற்கு அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 11- ல் மரணம் அடைந்தார் .ஈரோட்டில் இருந்து சென்னை சென்ற பாரதி , பின்னர் எந்தக் கூட்டத்திலும் உரையாற்றவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது . ஈரோட்டில் அவர் ஆற்றிய எழுச்சிமிகு உரையே இறுதியாக அமைந்ததால் , அவரது நினைவாக கருங்கல்பாளையம் நூலகத்துக்கு ' மகாகவி பாரதியார் நூலகம் ' என்று பெயரிட்டு , பாரதியாரை பெருமைப்படுத்தி வருகின்றனர் ஈரோடு மாவட்ட மக்கள் .
--தினமலர் . ( 01-12-2008 ).
No comments:
Post a Comment