* " அந்த பாகவதர் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்த மாதிரி ராகங்கள் பாடுவாராம் "
" பாக ' வெதர்' ன்னு சொல்லு !"
* " ஞாபக மறதியால என் பையன் பெயிலாயிட்டான் ."
" படிச்சதெல்லாம் மறந்துட்டானோ ..."
" படிக்கவே மறந்துட்டான் .."
* " எல்லா கேள்வியும் நல்லா படிச்சதா சொன்னே ... அப்புறம் எப்படி ஃபெயில் ஆனே ?"
" கேள்வியை மட்டும்தான் படிச்சேன் மம்மி .. அதான் !"
* " அவரோட எழுத்துக்களை தினமும் ஆயிரம் பேராவது படிக்கிறாங்களாமே ! அவர் எதுல எழுதறார் ?"
" அந்த ஹோட்டல் வாசல்ல இருக்குற மெனு போர்டுல...!"
* " நம்ம தலைவர் எதுக்கு ஆறாம் வகுப்புப் புத்தகத்தை விழுந்து விழுந்து படிக்கிறார் ?"
" ' உனக்கு ஆறாவது அறிவு இருக்கா 'ன்னு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுட்டாராம் !"
4 comments:
சரியான கடிங்க... அதிலும் "பாக வெதர்" ஏ.ஒன்..
அன்பு அஹமது இர்ஷாத் அவர்களுக்கு, ' சரியான கடிங்க ...' என்று கூறியுள்ளீர்கள் . மிக்க நன்றி !
ஜூப்பரு!
அஹமது இர்ஷாத் அவர்களே, மிக்க நன்றி !
Post a Comment