Saturday, May 22, 2010

ஜெயகாந்தன் .

ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்யோகங்கள் .... மளிகைக் கடை பையன் , டாக்டரிடம் பை தூக்கும் வேலை , மாவு மிஷின் கூலி , தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது , டிரெடில் மேன் , அச்சுக் கோப்பாளர் , பவுண்டரியில் இஞ்சின் கரி அள்ளிப்போட்டது , இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது , ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர் , பத்திரிகை புரூஃப் ரீடர் , உதவி ஆசிரியர் , பின் முழுநேர எழுத்தாளர் !
ராஜராஜன் விருது , பாரதிய பாஷா பரிஷத் விருது , சாகித்ய அகாடமி , ஞானபீடம் , நேரு விருது ( சோவியத் நாடு கொடுத்தது ) , பத்மபூஷன் இவை அனைத்தும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜே. கே -- தான் .
' என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது . நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன் ' எனச் சொல்வார் . எழுதாமல் இருப்பதைப் பொருட்படுத்துவதில்லை . கேட்டால் , ' நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க ' என்பார் . இன்னும் கேட்டால் , ' உங்க அம்மாதான் உன்னைப் பெத்துப்போட்டா . அதுக்காக , இன்னும் பெத்துக் கொடுன்னு கேட்டுட்டே இருப்பியா ?' என்பார் கோபமாக !
ஒரு கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது " இன்றைக்கு நீங்கள் விஸ்வரூபம் காட்டவில்லையே , ஏன் ?' என்றார் ஒரு வாசகர் . உடனே " விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல , காண்பது " என்றார் ஜெயகாந்தன் .
--- நா . கதிர்வேலன் . ஆ. விகடன் , 23 . 12 . 2009 .

2 comments:

Iyyaps said...

"விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல , காண்பது", well said.

க. சந்தானம் said...

Dear Iyyaps , Thank you for your information !