சந்திரனில் காலடித் தடத்தைப் பதிவு செய்த முதல் மனிதர் ஆம்ஸ்ட்ராங் தனது 82 -வது வயதில் வாழக்கைப் பயணத்தை நிறைவு செய்துகொண்டார். நிலவில் முதல் மனிதனாகக் காலடி வைத்து அமெரிக்கக் கொடியை நட்ட நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு மொத்தம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் இருந்தார். அந்தப் பயணம் முடிந்து பூமிக்குத் திரும்பிய ஆம்ஸ்ட்ராங்கை உலகமே கொண்டாடியது. ஆனால், அவர் அந்தப் புகழ் போதையை மனதில் ஏற்றிக்கொள்லாமல் இறுதிவரை எளிமையாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். பாராட்டு விழாக்களைக்கூடத் தவிர்த்தவர். ஓய்வுக்குப் பின்னும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்ட மேம்பாடுகளுக்காக நாசாவுக்கு மெயில் அனுப்பாத நாளே கிடையாது என்கிறார்கள். யார் கண்டது? உடலைவிட்டுப் பிரிந்த அவரது ஆன்மா சந்திரனில் சுற்றிக்கொண்டு இருக்கலாம். இனி நிலா - பாட்டி கதை சொல்பவர்கள் ஆம்ஸ்ட்ராங்கையும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள் !
--ஆனந்த விகடன் . 5 - 9 - 2012.
--ஆனந்த விகடன் . 5 - 9 - 2012.
No comments:
Post a Comment