மல்லிகைப்பூ அத்தரை தயாரிப்பது எப்படி?
600 கிராம் நல்லெண்ணையை களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து 25 கிராம் ஆல்கனெட் ரூட்டை போட்டு நன்றாக காய்ச்சினால் அது சிவந்த நிறமாக மாறிவிடும். அப்போது பாத்திரத்தை இறக்கி விட வேண்டும். சிறிது நேரம் ஆறிய பிறகு, துணியில் வடிகட்டி அதில் 45 மில்லிகிராம் லெமன் ரோசை விட்டு நன்றாக கலந்து அழகிய சீசாக்களில் அடைத்து உபயோகப்படுத்தலாம்.
கண் மை.
கண் மை தயாரிப்பது எப்படி?
சுத்தமான மெல்லிய வெள்ளை துணியில் சுத்தமான பசுவின் வெண்ணையை தடவி திரியை தயாரித்து கொள்ள வேண்டும். அதை அகல் விளக்கில் போட்டு மேலும் வெண்ணையை விட்டு திரியை எரிய விட வேண்டும். திரி எரியும் போது வரும் புகையை, ஒரு தட்டையான எவர்சில்வர் பாத்திரத்தில் லேசாக வெண்ணையை தடவி அதில் பிடித்துக் கொள்ள வேண்டும். புகை சேர, சேர அதை சுத்தமான கரண்டியால் வழித்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ள வேண்டும். இதை சிறிய டப்பாக்களில் போட்டு அடைத்து, உபயோகிக்க வேண்டும்.
--- தினமலர் தொழில் மலர். 23 - அக்டோபர் 2012.

No comments:
Post a Comment