4 சூரியன் கொண்ட அதிசய கிரகம் !
விண்வெளியில், ஒரு சூரியனை பல கிரகங்கள் சுற்றிவரும் பல சூரிய மண்டலங்கள் உள்ளன. 2 சூரியனைச் சுற்றிவரும் 6 அதிசய கிரகங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 4 சூரியன்களைச் சுற்றிவரும் அதிசய கிரகம் இப்போதுதான் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களூக்கான பிளானட் ஹன்டர்ஸ் இணையதளத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் என்பதால், இதற்கு பிஎச் - 1 என்று பெயரிடப்பட்டுள்ளது ( பிளானட் ஹன்டர்ஸ் என்ற ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் ' பி ,' ' எச் '. முதல் கண்டுபிடிப்பு என்பதைக் குறிக்க ' 1' ). பிஎச் - 1 கிரகம் நெப்டியூன் கிரகத்தைவிட கொஞ்சம் பெரியதாக உள்ளது. இதன் விட்டம், பூமியை விட ஆறு மடங்கு அதிகம். இந்த கிரகம், 2 சூரியன்களை சுற்றி வருகிறது. இந்த 2 சூரியன்களின் வெளிப்பகுதியில் மேலும் 2 சூரியன்கள் சுற்றி வருகின்றன.
பல சூரிய மண்டலங்கள் நெருக்கமாக இருக்கும் விண்வெளி பகுதியில் இந்த 2 அடுக்கு சூரிய மண்டலம் எப்படி உருவானது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த அதிசய அமைப்பால், பிஎச் - 1 கிரகத்துக்கு ஒரே வேளையில் 4 சூரியன்களின் ஒளி கிடைத்து வருகிறது. பிஎச் - 1 கிரகம் பற்றிய ஆய்வுகள், விண்வெளி ஆய்வியலில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- தினமலர். 17 - 10 - 2012.

No comments:
Post a Comment