நாலுகால் பிராணிகளிலேயே ரொம்பவும் உயரமுள்ளப் பிராணி ஆங்கிலத்தில் ' ஜிராஃப் ' எனப்படும் ஒட்டகச் சிவிங்கியே ஆகும் . தாய் ஒட்டகச் சிவிங்கி , குட்டியை ஈனும்போது என்ன நடக்கிறது தெரியுமா ? தாயின் இதமான , பாதுகாப்பான வயிற்றிலிருந்து குட்டி வெளியே வந்ததும் வராததுமாக , ரொம்பவும் உயரத்திலிருந்து ' பொத் ' தென்று தரையில் விழுகிறது .
அந்த மோதலிலிருந்தும் அதிர்ச்சியிலிலிருந்தும் அது மீளுவதற்குள் இன்னொரு அதிர்ச்சி அதற்காக காத்திருக்கிறது ! கீழே விழுந்தபின் , அது எழுந்து நிற்கும் முயற்சியில் , இன்னும் முழங்கால்களைத் தரையில் உறுதியாகப் பதிக்கக் கூட இயலாத நிலையில் , தன் பலங்கொண்ட மட்டும் தன் கால்களால் தாய் அதை எட்டி உதைக்கிறது . புதிதாகப் பிறந்த குட்டியைத் தாய் இப்படித் திருப்பித் திருப்பிப் பலமுறை எட்டி உதைப்பது நமக்குப் பார்ப்பதற்கு ஒரு கொடுமை போலத்தான் தோன்றும் ! ஆனால் , தன் குட்டி பிழைத்திருக்க வேண்டும் . அது நெடு நாள் உயிருடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தாய் , தன் உள்ளூணர்வால் உந்தப்பட்டு அது இழைக்கும் கொடுமையிலும் அதன் தாய்ப்பாசம்தான் வெளியாகிறது . அதாவது குட்டி தன் நாலுகால்களையும் ஊன்றிச் சீக்கிரம் ஓட ஆரம்பிக்கவில்லையென்றால் கொடிய காட்டு மிருகங்கள் அதைக் குதறித் தின்றுவிடும் என்று தாய்க்கு நன்றாகத் தெரியும் .
--- பாக்யா , ஜூலை 31 - ஆக 6 ; 2009 .
No comments:
Post a Comment