வணக்கம் . 21 - 02 - 1965 இதழ் ஆனந்தவிகடனில் ' பட உலகில் ' பகுதியில் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பைப் படித்தேன் . அவர் அறிந்து கொள்ள முடியாமல் போன சுலோகத்தை நான் எழுதி அனுப்பியிருக்கிறேன் . இதை நான் எனது 85 வயதான தாத்தாவிடமிருந்து தெரிந்துகொண்டு அனுப்புவதால் , சரியாகவே இருக்குமென்று நினைக்கிறேன் .
அந்த சுலோகம் ...
ஆயுர்விருத்தம் , க்ருஹசித்ரம் , மந்த்ரமெளஷதமைதுனே
தானம் மர்னாபமாநெள ச நவ கோப்யானி காரவேத் .
இந்த சுலோகத்தின் கருத்தாவது :
தனது வயது , சொத்து , வீட்டில் நடந்த சண்டை , சிறந்த மந்திரம் , நல்ல மருந்து , கணவன் மனைவியின் பிரியம் , தானம் , தனக்கேற்பட்ட புகழ் , அவமானம் ஆகிய இந்த ஒன்பது விஷயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் கூறக்கூடாது என்பதாம் .
( ஸூபாஷித ரத்ன பாண்டாகாரம் என்ற புத்தகத்திலிருந்து ).
--- வி. கே. கௌஸல்யா, சின்ன காஞ்சிபுரம் . ( 07 - 03 - 1965 ).
--- ஆனந்தவிகடன் , 22 - 07 - 2009 .
No comments:
Post a Comment