நமது உடலை மூலாதாரம் , சுவாதிஸ்தானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆக்ஞா , சகஸ்ரஹாரம் ஆகிய ஏழு சக்கரங்கள் இயக்குகின்றன . சக்கர செயல்பாடு பாதிக்கப்பட்டால் அவற்றால் கட்டுப்படுத்தப்படும் உடலுறுப்புக்கள் பாதிக்கப்பட்டு ஆரோக்கிய குறைபாடு வரும் .
இந்த சக்கரங்கள் சரியாக இயங்க , அவற்றுக்கு ' பிராணா ' ( உயிர்மூச்சு ) சக்தி முழுஅளவில் கிடைக்கவேண்டும் .
மூலாதாரம் சரிவர செயல்பட , அதற்கு ஒரு நாளில் 600 மூச்சு கிடைக்க வேண்டும் . இதுபோல் , சுவாதிஸ்தானம் , மணிபூரகம் மற்றும் அநாகதம் சரிவர செயல்பட ஒரு நாளுக்கு தலா 6 ஆயிரம் மூச்சுக்களும் , விசுத்தி , ஆக்ஞா மற்றும் சகஸ்ரஹாரம் சரிவர செயல்பட ஒரு நாளுக்கு தலா ஆயிரம் மூச்சுக்களும் தேவை . ஆக , உடல் இயக்கம் சரிவர நடக்க , ஒரு நாளுக்கு 21 ஆயிரத்து 600 மூச்சுக்கள் தேவை . அதாவது , ஒரு நிமிடத்துக்கு நாம் 15 முறை சுவாசிக்கவேண்டும் .
ஆனால் , மன படபடப்புகளால் இந்த சரியான அளவில் நாம் சுவாசிப்பதில்லை . ஒன்று , மிக அதிகமாக சுவாசிக்கிறோம் அல்லது மிகக் குறைவாக சுவாசிக்கிறோம் .
ஒரு நிமிடத்திற்கு 3 முறை மட்டுமே சுவாசிப்பதால் ஆமையின் ஆயுள் அதிகம் ( சராசரியாக 300 ஆண்டுகள் ) ; ஒரு நிமிடத்திற்கு 20 முறைக்கு மேல் சுவாசிப்பதால்தான் நாய் , குதிரை போன்ற விலங்குகளின் ஆயுள் மிகக் குறைவு . மூச்சு குறையக் குறைய ஆயுள் அதிகரிக்கும் .இதற்கு , ' மூச்சை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தி விட்டால் ஆயுள் அதிகரிக்கும் ' என்று அர்த்தம் கொள்ளவேண்டாம் . மூச்சை வலுக்கட்டாயமாக அடக்குவது , பெரும் ஆபத்து .
சராசரி மனிதர்களின் உடலுக்கு ஒரு நாளுக்கு 21 ஆயிரத்து 600 மூச்சுகள் அவசியம் . இதற்காக ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் என்ற அளவுப்படி சுவாசத்தை நிதானமாக , ஆழமானதாக மாற்ற பயிற்சி செய்வதே பாதுகாப்பான , சரியான பிராணாயாம முறை .
--- தினமலர் , பக்திமலர் . ஜூலை 30 . 2009 .
No comments:
Post a Comment