Thursday, December 31, 2009

சாயிபாபா

சாயிபாபா பெயர் வந்த விதம் .
ஷீர்டியில் உள்ள கண்டோபா ஆலயம் மிகவும் புராதனமானது . ஷீர்டி மக்களுக்குக் குலதெய்வம் மாதிரி . அங்கே மஹல்சாபதி என்கிற பிராமண குருக்கள் அன்றாட வழிபாட்டு பூஜைகளை செய்து வந்தார் . அங்கு பாபாவுக்கு ( விசித்திர மனிதர் ) புதிதாக அறிமுகம் ஆன , பாட்டீல் மனைவியின் அகோதரர் பையனுக்கு திருமணம் . திருமண கோஷ்டியுடன் அந்த விசித்திர மனிதரும் வந்தார் . திருமண கோஷ்டியினர் ஷீர்டி வந்ததும் கண்டோபா கோயிலுக்கே முதலில் சென்றனர் . அங்கு இருந்த மரத்தடியில் இளைப்பாறுவதற்காக அவர்கள் ஒவ்வொருவராக வண்டியில் இருந்து இறங்கி வந்தனர் .
அந்த விசித்திர மனிதரும் ( பாபா ) கண்டோபா ஆலயத்திற்குள் கால் வைத்தார் . அவரை நேரில் பார்த்த மஹல்சாபதிக்குத் தாங்க முடியாத ஆச்சர்யம் . அந்த விசித்திர மனிதரை ' யா சாயீ '
( சாயி நீங்கள் வர வேண்டும் ) என்று உற்சாகமாக இரு கைகளையும் நீட்டியபடியே வரவேற்றார் . அந்த நிமிடத்தில் இருந்து அந்த விசித்திர மனிதர் சாயிபாபா என்று அழைக்கப்பட்டார் . திருமண கோஷ்டியினர் திருமணம் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பினர் . சாயிபாபா மட்டும் ஷீர்டியிலேயே தங்கத் தொடங்கினார் . அவரை ' சாயி ' என்று பெயர் கூறி வரவேற்ற மஹல்சாபதி சாயிபாபாவின் மிக முக்கியமான முதல் அடியவர் ஆனார் . சாயிபாபா இறுதி நாள்களில் முக்தி அடைந்தபோது மஹல்சாபதியின் மடியிலேயே தலை வைத்துப் படுத்து சமாதி நிலையில் இருந்தார் ..
.--- எஸ் . லெக்ஷ்மி நரசிம்மன் , இலக்கியப்பீடம் . ஆகஸ்ட் 2009 .

No comments: