Wednesday, December 9, 2009

சோர்வில்லாமல் ....

சோர்வில்லாமல் காலையில் எழணுமா ?
திபேத்திய புத்த பிட்சுக்கள் பின்பற்றும் ஒரு மகத்தான ரகசிய வழி . திபேத்தில் புத்தபிட்சுக்கள் நம்மைப்போல் காலையில் அரக்கப்பரக்க எழுந்திருப்பதில்லை . மாறாக , படுக்கையில் படுத்துக் கொண்டே சில உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள் . இதனால் உடலின் அசதியும் சோர்வும் போவதோடு , உடல் முழுக்க சக்தி ஒரே சீராகப் பரவுகிறதாம் . இது காலையில் புத்துணர்ச்சியையும் , சுறுசுறுப்பையும் கொடுக்கிறதாம் . இதில் நல்லதொரு விஷயம் என்னவென்றால் , இந்தப் பயிற்ச்சிகளை கண்களை மூடிக்கொண்டு , படுக்கையில் படுத்தவாறே செய்யலாம் .
ஸ்டெப் - 1 . முதலில் கண்களை மூடிக்கொண்டே , காதுகளை உங்கள் கைகளால் அழுத்திக் கொண்டு , உள்ளங்கைகளை மேலும் கீழுமாக 20 தடவைகள் அசைக்கவும் .
பயன்கள் : இது முகத்திற்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு , ஈறுகளை வலுவடையவும் செய்யும் . நெற்றிப் பொட்டில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும் .
ஸ்டெப் - 2 . வலது கையை முன் நெற்றியில் வைத்து அதன் மேல் இடது கையை வைக்கவும் . பிறகு இந்த் நிலையில் கைகளை மேலும் கீழுமாக 20 தடவை அசைக்கவும் .
பயன்கள் : இது காலைய்ல் தலைவலி வராமல் தடுப்பதோடு எழுந்தவுடன் , சில சமயம் இருக்கும் தலைச் சுற்றலையும் போக்கிவிடும் .
ஸ்டெப் - 3 . கண்களுக்கு வாருங்கள் . இரண்டு கட்டை விரல்களை நடக்கிக் கொண்டு இறகால் தடவுவதுபோல் மென்மையாக கணகள் இரண்டையும் , 15 முதல் 20 தடவைகள் மசாஜ் செய்யவும் .
பயன்கள் : இது நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்ய உதவுவதோடு , கண் பார்வை தீர்க்கமாக இருக்கவும் உதவி செய்கிறது .
ஸ்டெப் - 4 . வயிற்றுப் பகுதிக்கு வாருங்கள் . உள்ளங்கைகளை வயிற்றின் மேல் வைத்துக் கொண்டு முழ்ங்கால்களை சற்று மடக்கிக் கொள்ளவும் . பிறகு மெல்ல வயிற்றுப் பகுதியை உள்லங்கைகளால் , 30 - 50 தடவைகள் வரை மசாஜ் செய்யவும் ( Clockwise ) .
பயன்கள் : வயிற்றுத் தசைகளை இது பலப்படுத்துவதோடு , கணையத்தையும் சுறுசுறுப்பாக்குகிறது . கல்லீரலுக்கும் நல்ல பயிற்சி இது . காலையில் சில சமயங்கள் ஏற்படும் வயிற்றுப் புரட்டலையும் போக்கும் . முக்கியமாக பெருங்குடலின் அசைவுகலை சீராக்குகிறது .
ஸ்டெப் - 5 . 20 தடவைகள் வயிற்றை வெளியே தள்ளி , உள்ளே இழுக்கவும் .
பயன்கள் : இதனால் சிறு நீரகங்கள் , கல்லீரல் , ஜீரண உறுப்புகள் பயனடைகின்றன . மேலும் வயிற்றுப் பகுதியில் அதிகமாக இருக்கும் கொழுப்புச் சத்து கரையவும் இந்தப் பயிற்சி உதவுகிறது .
ஸ்டெப் - 6 . படுத்த நிலையிலேயே முழ்ங்கால்களை கைகலால் கட்டிக்கொண்டு அவற்றை மார்புக்கு மேலே கொண்டு வரவும் .
பயன் : இது வயிறு , இதயம் போன்ற உறுப்புகளின் உள்ளே இருக்கும் தசைகளுக்கு நல்லதொரு மசாஜ் .
ஸ்டெப் - 7 . இப்போது மெல்லக் கண்களைத் திறந்து , எழுந்து உட்காரவும் . உட்கார்ந்தவாறே , குனிந்து பாதங்களையும் , உள்ளங்கால்களையும் இரு கைகளால் மசாஜ் சய்யவும் .
பயன் : முதுகுத் தண்டுக்கு நல்ல பயிற்சி இது .
--- இந்திரா வெங்கடராமன் , ஹைதராபாத் . குமுதம் சினேகிதி . ஆகஸ்ட் 1 - 15 , 2009 .

No comments: