சாகும் தருவாயில் ஒரு குரு படுக்கையில் கிடந்தார் . அவரை சுற்றி அவரது சீடர்கள் நின்று கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர் . குருவின் மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது . மெதுவாக கண் திறந்த குரு , ' என்ன ' என்பது போல் அவர்களைப் பார்த்தார் . சீடர்களின் கண்களில் கண்ணீர் . கடைசியாக அவர்களுக்கு ஏதாவது சொல்ல நினைத்த குரு , ' வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரிய வைக்கிறேன் , அருகில் வாருங்கள் ' என்று தன் சீடர்களை அழைத்தார் . நெருங்கி வந்த அவர்களிடம் தன் பொக்கை வாயைத்திறந்து காண்பித்தார் . ' அவ்வளவுதான் போங்கள் ' என்றார் . ஒரு சீடனைத் தவிர எல்லோரும் ' புரிந்தது ' என்று தலையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டனர் . அந்த சீடனுக்கோ ஒரே குழப்பம் . 'வாய்க்குள் அப்படி என்ன வாழ்க்கை தத்துவம் இருக்கப் போகிறது ' என்று குழம்பியபடியே இருந்தவன் , குருவிடமே கேட்டான் .
' என் வாய்க்குள் என்ன இருந்தது ?' - குரு கேட்டார் .
' நாக்கும் , உள் நாக்கும் இருந்தது ' - சிஷ்யன் .
' பல் இருந்ததா ?' - குரு .
' இல்லை ' - சிஷ்யன் .
' அதுதான் வாழ்க்கை . வன்மையானது அழியும் . மென்மையானது வாழும் ' - குரு .
--- தினமலர் கம்ப்யூட்டர் மலர் , 03 - 08 - 2009 .
No comments:
Post a Comment