Monday, December 14, 2009

இரவு என்பது இருக்காது !

ஒரு காலத்தில் நாம் எதெல்லாம் உண்மையாக நடக்க முடியாது என்று சந்தேகப்பட்டோமோ அதெல்லாம் இன்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் உண்மையாகி விட்டது . நாளுக்கு நாள் புதுசு புதுசா , தினுசு தினுசா கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன .
புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் . பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகிறது . இதனால் பூமியின் ஒரு பகுதி எப்போதும் இருளாகவே இருக்கிறது . இதை மாற்ற வேண்டும் என்ற ஆராய்ச்சி தான் அது .
பூமியில் சூரியனின் ஒளி விழும் நாடுகள் பகலாகவும் , சூரியனின் ஒளி படாத நாடுகள் இருளாகவும் இருக்கின்றன . இது சாதாரண நிகழ்வு .
இரவை பகலாக்கும் முயற்சியில் பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரக்கூடிய செயற்கை கோளை அமைக்க உள்ளார்கள் . இந்த செயற்கை கோள்கள் சூரிய ஒளியை கவர்ந்து தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும் . அதை உடனடியாக இருளாக இருக்கும் நாடுகள் மீது செலுத்தினால் அந்த நாடுகள் எல்லாம் பகல் போல் காட்சி தரும் . இது மட்டும் சாத்தியமாகி விட்டால் பூமியில் இரவு என்பதே இல்லாமல் போய்விடும் . எப்போதும் பகல் போல் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும் . இது இயற்கைக்கு முரணானது என்றொரு கருத்தும் நிலவுகிறது . ஆனாலும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது .
அடுத்து வரும் தலைமுறை இரவு என்று ஒரு அற்புதமான நிகழ்வை இழந்து இருப்பார்கள் . இரவு என்றால் என்னவென்று கேட்பார்கள் . இதெல்லாம் கொஞ்ச நாட்களில் நடக்கும் என்கிறார்கள் . எதிர்காலத்தை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானிகள் .
--- தினத்தந்தி , 14 - 04 - 2009 .

No comments: