Sunday, December 20, 2009

தேசிய கொடி .

தேசிய கொடி உருவான வரலாறு .
கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது . அது சிவப்பு , பச்சை , மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து , பட்டைகளில் வெண்தாமரை மலர்கள் , வந்தேமாதரம் என்ற வார்த்தைகள் , கதிர்வீசும் ஆதவன் , பிறைசந்திரன் , நட்சத்திரங்கள் என்று அந்தக்கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது . பின்னர் , 1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது .
8 வெண்தாமரைகளுக்குப் பதிலாக , வானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு , அந்தக்கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும் , அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர் .
1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3 ம் முறையாக மாற்றப்பட்டது . இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும் , பாலகங்காதரதிலகரும் சிவப்புநிற பட்டை ( 5 ) பச்சைநிற பட்டை (4 ) , அடுத்தடுத்து அமைந்த இந்தகொடியின் மேற்பகுதி இடது புறம் சிறிதளவு யூனியன் ஜாக்கும் , வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும் , நடுவில் சில நட்சத்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன . இக்கொடி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை .
1921 ம் ஆன்டூ விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது , பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து , முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி காவி , பச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார் . இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது .
பின்னர் , அடர் காவி , அடர் பச்சை , மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் , மத்தியிலுள்ள வெண்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24 அரும்புக் கால்களும் கொண்ட ஓர் அசோகச் சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது .
இதை 22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து , அதன்பின் , முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது .
-- தேவராஜன் , தினமலர் ஆகஸ்ட் 14 , 2009 .

No comments: