விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை ( ஐ. எஸ். எஸ். ) கடந்த 30 ம் தேதி மாலையில் ஏராளமானோர் பார்த்தனர் .
விண்ணில் இருந்தபடி விண்வெளியை ஆய்வு செய்ய அமெரிக்கா , ரஷ்யா , கனடா , ஜப்பான் , மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து 98 ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி வருகின்றன . இதற்கான கட்டுமானப்பணிகள் வரும் 2010 வரை நடைபெறுகிறது . தற்போது பூமியில் இருந்து 336 முதல் 346 கி. மீ உயர சுற்று வட்டப்பாதையில் விண்ணில் இந்த நிலையம் மணிக்கு 27 ஆயிரத்து 724 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகிறது .
தமிழகத்தில் 30 ம் தேதி மாலை 6 . 24 மணிக்கு வட மேற்கு அடிவானத்தில் தோன்றி தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 6 .35 மணிக்கு தென்கிழக்கு அடிவானத்தில் மறையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் 4 நிமிடங்களுக்கு மேல் காணமுடியவில்லை . பிரகாசமான நட்சத்திரம் வேகமாக நகர்வதைப்போல தோற்றம் தந்தது . தொலைநோக்கி ஏதுமில்லாமல் வெறும் கண்ணாலேயே பார்க்கமுடிந்தது .
--- தினகரன் . 1 டிசம்பர் 2009 .
மேலும் , நேற்று 5 ம் தேதி காலை 5 . 53 மணிக்கு தென்மேற்கு அடிவானத்தில் தோன்றி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 5 . 59 மணிக்கு வடகிழக்கு அடிவானத்தில் மறைந்தது .
No comments:
Post a Comment