Thursday, July 8, 2010

கண்ணதாசன் .

* கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல . ' அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும்,
வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம் . அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன் ' என்பது அவரே
அளித்த விளக்கம் . பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
* சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன் . அந்த வீட்டில் அவர்
பெயர் நாராயணன் .
* கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம் . ' நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்துதான் '
என்பார் .
* முதல் மனைவி பெயர் பொன்னம்மா . அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் .
இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50 -வது வயதில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார் . இவர்களுக்குப்
பிறந்தவர்தான் விசாலி . மொத்தம் 15 பிள்ளைகள் .
* ' உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? ' என்று கேட்டபோது , அவர்
சொன்ன பதில்....' புத்தகங்களைப் பின்பற்றுங்கள் . அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள் !'
* ' பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி
நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது ' என்பது அவர் அளித்த வாக்குமூலம் .
* தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது
கண்ணதாசனின் கடைசி விருப்பம் !
* இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார் . அதன் கடைசி வரி இப்படி
முடியும்...
' ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு !'
--- ஆ.விகடன் ,10.02. 2010 .

No comments: