டாய்லெட் கதவை விட செல்போன் மோசம் . 18 மடங்கு கிருமி பாதிப்பு .
சராசரியாக டாய்லெட் கதவின் கைப்பிடிகளில் உள்ளதைப்போல 18 மடங்கு பாக்டீரியாக்கள் செல்போன்களில் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது . இது உடல் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் .
இதில் அதிகபட்சமாக சிலவற்றில் 39 மடங்கு கிருமிகளும் உள்ளன . இது பாதுகாப்பான அளவுதான் . பொதுவாக மனிதன் மற்றும் விலங்குகளின் கீழ்குடல் பகுதிகளில் காணப்படும் எண்டோபேக்டீரியா எனப்படும் கிருமிகள்தான் இவை . இதுதவிர , உணவை விஷமாக்கும் இ - கோலி மற்றும் ஸ்டபிலோகாக்கஸ் உள்ளிட்ட பாக்டீரியாக்களும் செல்போன்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இவை மனித உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
" டாய்லெட் உபயோகித்த பின்னர் சுகாதார முறைகளை கடைபிடிக்காததன் காரணமாக கைகளில் இருக்கும் இத்தகைய பாக்டீரியாக்கள் செல்போன்களில் குடியேறிவிடுகின்றன . எனவே , சுகாதாரமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது ".
--- தினகரன் & தினமலர் . 29 ஜூலை , 2010.
No comments:
Post a Comment