Wednesday, July 28, 2010

நன்றி சொல்லுங்கள் !

ஒரு இளைஞன் ரொம்பவும் நொந்துகொண்டான் . கடவுள் உதவுவார் என்பதெல்லாம் நடக்கக்கூடிய விஷயமல்ல என்று நினைத்தான் . ஆனால், அவனுடன் கடவுள் பேசினார் . " உன்னுடனேயே நான் வருகிறேன் . நீ நடந்து செல்லும்போது சற்றே திரும்பி வந்த பாதையைப் பார் . அங்கே இரண்டு ஜோடி காலடித் தடங்கள் தெரியும் . ஒரு ஜோடி உன்னுடையது ; மற்றொரு ஜோடி என்னுடையது !"
திகைத்த அவன் திரும்பிப் பார்த்தான் . சரிதான் . நான்கு கால் தடங்கள் ! நாளாக ஆக , அவன் கடவுள் உடனிருப்பதை நம்ப ஆரம்பித்தான் .
ஒரு கட்டத்தில் அவன் பெரிய பிரச்னையில் சிக்கிக் கொண்டான் . அப்போது அவன் திரும்பிப் பார்த்தபோது இரு காலடித் தடங்கள்தான் தெரிந்தன . என்ன ஏமாற்று இது ! கூட வருவதாகச் சொன்னவர் நான் இக்கட்டில் மாட்டிக் கொண்டபோது கழற்றிக் கொண்டுவிட்டாரே .... என்னுடனேயே வருவதாக அவர் சொன்னதெல்லாம் வெறும் பித்தலாட்டம்தானா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தான் . அதனால் கோபம்தான் கூடியது . உடனே கடவுளை ஏச ஆரம்பித்துவிட்டான் . அப்போது கடவுள் குரல் கேட்டது : " நீ பார்த்தது உன் காலடித் தடங்கள் இல்லை , தம்பி . அவை என்னுடையவை . எப்படித் தெரியுமா ? உன் காலடித் தடம் தெரியாதபடி நான் உன்னை இப்போது சுமந்து சென்று கொண்டிருக்கிறேன் . பிரச்னை தீர்வான பிறகு உன்னைக் கீழே இறக்கி விட்டுவிடுவேன் . ஏனென்றால், அப்போது நீ உன் சொந்தக் கால்களால் நடக்கும் தெம்பைப் பெற்றிருப்பாய் . ஆனால், அப்போதும் நான் உன்னுடனேயே கூடவே வருவேன் !"
இது கதை . ஆனால் பொதுவான சிக்கல் என்னவென்றால், அவர் நம் கூடவே இருப்பதைக் காண முடியாதபடி அகந்தை நம் கண்களை மறைப்பதுதான் .
--- பிரபுசங்கர் . தினகரன் . இணைப்பு . 14. 02. 2010 .

No comments: