நேரம் ஒதுக்குங்கள் .
சிரிக்க நேரம் ஒதுக்குங்கள் ;
அது இதயத்தின் ஓசை .
சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள் ;
அது சக்தியின் பிறப்பிடம் .
விளையாட நேரம் ஒதுக்குங்கள் ;
அது இளமையின் ரகசியம் .
படிக்க நேரம் ஒதுக்குங்கள் ;
அது அறிவின் ஊற்று .
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் ;
அது மகிழ்ச்சிக்கு வழி .
தியானத்திற்கு நேரம் ஒதுக்குங்கள் ;
அது தெளிவுக்கு வழி .
உழைப்புக்கு நேரம் ஒதுக்குங்கள் ;
அது வெற்றிக்கு வழி .
--- எம். பிரேமா , மணிமுத்தாறு. தினத்தந்தி , இணைப்பு . 13. 02. 2010 . இதழ் உதவி : N. G. கலியபெருமாள். திருநள்ளாறு.
2 comments:
கவிதை எழுதிய படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்,
பகிர்ந்த உங்களுக்கு நன்றி,
இந்த Word Verification... எடுத்து விடுங்க.
சி. கருணாகரசு அவர்களுக்கு , கவிதை படைப்பாளிக்கு வாழ்த்தும் , பகிர்ந்த எனக்கு நன்றியும் சொல்லியுள்ளீர்கள் . அதற்கு நன்றி !
Post a Comment