அதிசய அரிசி !
சமைக்காமலே சாப்பிடலாம்...
நமது அசாமில்தான் விளைகிறது அந்த அதிசய அரிசி . பெயர் , ' கோமல் சால் '. இதை 45 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து அப்படியே சாப்பிடலாம் ! பால், தயிர், சர்க்கரை சேர்த்தால் ருசியோ ருசி !
அரிசி உள்ளிட்ட தானியங்களைக் கடினமாக்கும் ரசாயனப் பொருள் , அமிலோஸ் . இது சாதாரண அரிசியில் 20 முதல் 25 சதவீதம் இருக்கும் . அமிலோஸ் வெறும் 5 சதவீதம் மட்டுமே இருப்பதுதான் கோமல் சாலின் மென்மைக்குக் காரணம் . இதனால்தான், சமைக்க வேண்டிய அவசியம் இல்லை .
சியாசின் போன்ற பனிப்பிரதேச எல்லைகளில் காவல்பணியில் ஈடுபடும் நமது ராணுவ வீரர்களை கோமல் சால்தான் பசியாற்றி வருகிறது .
' இந்த சூப்பர் அரிசியை நாடு முழுவதும் பயிரிட்டால் எவ்வளவு லாபம், நன்மை ? விறகு , காஸ் செலவுகளை கோடி கோடியாகக் குறைத்திருக்கலாம் . பெண்களுக்கு நேரம் மிச்சமாகும் .' பேச்சலர் ' ஆண்களுக்கு எவ்வளவு நிம்மதி ? புவி வெப்பமாவதையும் குறைக்கலாமே ? என்றெல்லாம் கேள்விகள் வருகிறதுதானே ?'
ஒரிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள தேசிய அரிசி ஆய்வு நிறுவனம், நாட்டின் பல பகுதிகளிலும் பயிரிடுவதற்கு ஏற்ற கோமல் சால் புதுரகத்தை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டது !.
" ஏறக்குறைய அசாம் பருவநிலை உள்ள எல்லா பகுதிகளிலும் இதைப் பயிரிட முடியும் . ஆந்திரா, பீகார், மே.வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் சில பகுதிகளில் இதைப் பயிரிடலாம் . நாடு முழுவதும் பயிரிடும் வகையிலான தொழில் நுட்பத்தை உருவாக்கி வருகிறோம் . விரைவில் வெற்றி பெறுவோம் " என்று நம்பிக்கையூட்டுகிறார் , கட்டாக் ஆய்வு நிறுவன இயக்குனர் , தபன் ஆதித்யா .
--- தினமலர் . இணைப்பு . பிப்ரவரி 14 . 2010 .
No comments:
Post a Comment