Saturday, July 17, 2010

அரண்மனை !

ஜெய்ப்பூர் அரண்மனை !
ராஜஸ்த்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் கம்பீர அடையாளம்.... ' ஹவா மஹால் '!
ஹவா என்றால் , காற்று . மஹால் என்றால் மாளிகை . பெயரில் மட்டுமல்ல , உண்மையிலேயே இது காற்று மாளிகை . எந்த நேரம் உள்ளே நுழைந்தாலும் உடலை இதமாக வருடும் இளங்குளிர் காற்று .
மகாராஜா ஹவாய் பிரதாப் சிங்கால் 1799ல் கட்டப்பட்டது . இந்த ஐந்தடுக்கு அற்புத மாளிகை . இந்த மாளிகையை வடிவமைத்தவர் , கட்டிடக்கலை மேதை லால் சந்த் உஸ்தாத் . இவர் , ஸ்ரீகிருஷ்னர் மற்றும் ராதா தேவியின் பக்தர் .
' அரண்மனை மற்றும் சாலையில் நடக்கும் நிகழ்வுகளை அரசகுலப் பெண்கள் வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் உள்ளே இருந்தபடியே ரசிக்கும் வகையில் ஒரு மாளிகை அமைக்க வேண்டும் ' என்று மகாராஜா பிரதாப் சிங்க் கூறியதும் , கட்டட வடிவமைப்பு பற்றி பல நாட்களாக யோசித்திருக்கிறார் லால் சந்த் . அவர் அளித்த எல்லா வடிவமைப்புகளையும் மகாராஜா நிராகரித்துக் கொண்டே இருந்ததில் அவருக்கு கவலை .
ஒருநாள் , வழக்கம்போல் ஸ்ரீகிருஷ்ணரையும் ராதா தேவியையும் வழிபட்ட வேளையில் , கிரீடத்தில் அவரது கண்கள் பதிய... கிடைத்தது தீர்வு !
மகாராஜாவிடம் ஓடிய அவர் , " எனது இஷ்ட தெயவமான ஸ்ரீகிருஷ்ணரின் கிரீட வடிவில் மாளிகையை அமைத்துவிடுகிறேன் . கிரீடத்தின் அடுக்குகள் போல் மாளிகை ஜன்னல்களை அமைத்துவிட்டால் நீங்கள் விரும்பும் விதத்தில் மாளிகை அமைந்துவிடும் " என்று சொல்லியிருக்கிறார் . அவர் வரைந்து அளித்த படத்திலேயே மயங்கிவிட்டார் மகாராஜா... 953 ஜன்னல்கள் கொண்ட ஹவா மஹால் மலர்ந்தது !
--- தினமலர் . பிப்ரவரி 14 . 2010 .

No comments: