Saturday, October 30, 2010

உடல் பருமனை குறைக்க ...

உலகம் முழுவதும் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது . இந்நிலையில் , குடமிளகாயில் உள்ள ஒரு பொருள் உடல் பருமனை குறைக்க உதவுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது .
ஆராய்ச்சியாளர் ஜாங் ஒன் யுன் தலைமையிலான குழுவினர் , உடல் பருமனை குறைப்பதில் குடமிளகாயின் பங்கு குறித்து ஆய்வு செய்தனர் . ஒரு பிரிவு எலிகளுக்கு அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுடன் குடமிளகாய் கலந்த உணவைக் கொடுத்து வந்தனர் . மற்றொரு பிரிவுக்கு அதே கொழுப்புச் சத்து உணவை மட்டும் கொடுத்தனர் .
குறிப்பிட்ட நாட்கள் கழித்து எலிகளின் உடல் பருமனை சோதனையிட்டனர் . குடமிளகாய் கலந்த உணவு சாப்பிட்ட எலிகளின் எடை அதை சாப்பிடாத எலிகளைவிட 8 சதவிகிதம் வரை குறைந்திருந்தது . மேலும் , கொழுப்புச் சத்தின் அளவு கட்டுப்பட்டிருந்தது .
" குடமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற பொருள் , கொழுப்பை குறைக்கிறது . உடல் பருமனிலிருந்து விடுபட உதவுகிறது . பருமனை குறைக்க மருந்து தயாரிக்க இந்த ஆராய்ச்சி உதவும் " என ஜாங் தெரிவித்தர்ர் .
---- தினகரன் , ஜூலை 23 . 2010.

No comments: