விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் .
விமானங்களை கடத்தாமலேயே வீட்டில் இருந்து ஒரு கம்ப்யூட்டர் உதவியுடன் விமானத்தை தரையில் மோதவைத்து சின்னாப்பின்னமாக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர் தீவிரவாதிகள் . இந்த அதிர்ச்சித் தகவல் உலக நாடுகள் அனைத்தையும் கலக்கம் அடைய வைத்திருக்கிறது . இதைக் கண்டுபித்தவர்கள், பிரிட்டன் நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் விஞ்ஞானிகள்தான் சொல்லியுள்ளனர் .
அதாவது விமானங்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்குகின்றன . இந்த கம்ப்யூட்டர்கள்தான் தீவிரவாதிகளுக்கு குறி . அதாவது விமானங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில், அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் மாஸ்டர் செர்வர்கள், தரைக்கட்டுப்பாட்டு நிலயங்களில்தான் இருக்கும் . இந்த செர்வர்களில், தீவிரவாதிகள் தங்கள் சொல்படி கேட்கக்கூடிய வைரஸ்களை புகுத்துவார்களாம் . பிறகு, அந்த வைரஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும்படி புரோகிராமிங் வடிவமைப்பார்களாம் . அதன்பிறகு, அந்தரத்தில் சென்றுகொண்டிருக்கும் விமானத்தை, தரையில் இருந்தபடியே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள் தீவிரவாதிகள் . அதன்பிறகு, விமானத்தை தரையிலோ, மலையிலோ, கடலிலோ விழவைக்கவோ, மோதச்செய்யவோ உத்தரவு பிறப்பிப்பார்களாம் . அடுத்த நிமிடம் விமானம் சின்னாபின்னமாகிவிடும் . அப்புறம் என்ன அதில் இருப்பவர்கள் அத்தனைபேரும் காலி .
இந்த சைபர் கிரைம் குற்ற நிகழ்வுகள் இன்னும் சில மாதங்களில்கூட நடப்பதற்கு சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள் . விமானங்களை மட்டுமல்ல, அணு உலைகள், மின்சார உற்பத்தி கேந்திரங்கள் என எதைவேண்டுமானாலும் தீவிரவாதிகளால் தகர்க்க முடியுமாம் .
பொதுவாக கம்ப்யூட்டர் சார்ந்த போலி வைரஸ்கள் உற்பத்தி கேந்திரமாக சீனா விளங்குவதால், அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .
--- தினமலர் . அக்டோபர் 21 , 2010 .
No comments:
Post a Comment