பெண்கள் செயற்கை முறையில் ' அவற்றை ' பெரிதாக மாற்றிக்கொள்வது விஞ்ஞான வளர்ச்சியா ? இதனால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படாதா ?
மனித இனத்துக்கு மட்டுமே நேர்த்தியான மார்பகங்கள் உண்டு . மற்ற அனைத்து பாலூட்டிகளுக்கும் முலைக்காம்புகள் மட்டுமே உண்டு . கூடவே, சிறிய ' பை'கள் இருக்கலாம் . பெரிய மார்பகத்துக்கும் பால் உற்பத்திக்கும் சம்பந்தம் கிடையாது . ஒப்பிடும்போது மார்பகம் வளர்ச்சி அடையாத பெண்களுக்கு இன்னும் நிறைய பால் சுரக்கக்கூடும் . மார்பக அளவு என்பது வம்சத்தைப் பொருத்தது ( குறிப்பாக அப்பா வழி ! ) ஆகவே , அவற்றைத் தாழ்வுமனப்பான்மை இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதே நல்லது . அதைப் பெரிதாக்கும் சர்ஜரி பேஜாரானது . முலைக் காம்பில் துவங்கி நேர்க்கோடாகக் கீழ் நோக்கி வெட்டித் திறந்து , ' சிலிகான் ' என்கிற ' இம்ப்ளான்ட்' டை நுழைத்துப் பொருத்திப் பெரிதாகுகிறார்கள் . ( சிலிகான் உலோகம் அல்ல . அது குவார்ட்ஸ்போல இயற்கையில் கிடைக்கிற , சற்று மிருதுவான , மினரல் ). சில சமயங்களில் காம்புகளை வெட்டித் தனியே எடுத்து ( கோணலாகப் போகக் கூடாது என்பதற்காக ) பிறகு மீண்டும் பொருத்தி.... ஏராளமான தையல்கள் போட வேண்டியிருக்கும் . பிற்காலத்தில் ' இம்ப்ளான்ட் ' நகர்ந்து ... எசகுபிசகாகிப் போகவும் வாய்ப்பு உண்டு . பால் சுரப்பதுகூட சற்றுத் தடை படலாம் . தேவையா இதெல்லாம் ? !
---ஹாய் மதன் . ஆனந்த. விகடன் , 05. 05 .2010.
No comments:
Post a Comment