Wednesday, October 27, 2010

' ஆரூட ' ஆக்டோபஸ் பால் திடீர் மரணம் .

தென்னாப்பிரிக்காவில் சில மாதங்களுக்கு முன் நடந்த உலகக் கோப்பை கால் பந்து போட்டிகளில், விளையாட்டு வீரர்களைவிட அதிகமாக பிரபலமடைந்தது பால் என்ற ஆக்டோபஸ் .
போட்டிகளின் முடிவை துல்லியமாக அது கணித்ததுதான் இந்த புகழுக்குக் காரணம் . ஜெர்மனியில் உள்ள சீ லைப் செண்டர் என்ற அருங்காட்சியகத்தில் வளர்க்கப்பட்டது இந்த 2 வயது ஆக்டோபஸ் பால் .
இப்படி உலகம் முழுக்க பிரபலமான பால், தனது கண்ணாடி தொட்டிக்குள் நேற்று முன்தினம் ( திங்கள் கிழமை ) இரவு உயிரிழந்தது .
இது குறித்து ஓபர்ஹாசன் விலங்கியல் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், ' இது எங்களுக்கு பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது . அதன் பெருமையை நினைவு கூறும் வகையில் நிரந்தரமான ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் . இதற்காக அதன் உடல் குளிர்பதனப்படுத்தப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது .
பாலை போலவே ஜோதிடம் கூறும் திறன் பெற்ற இன்னொரு குட்டி ஆக்டோபஸை அங்கு, வளர்க்க தொடங்கி விட்டனர் அருங்காட்சி நிர்வாகத்தினர் .
--- தினகரன் & தினமலர் . அக்டோபர் 27 , 2010 .

No comments: