கஷ்டங்களைக் கேட்டுக் கேட்டே மனம் உடைந்து , நொறுங்கிவிட்டது ஸ்ரீகாளஹஸ்தி !
சுனாமியாகச் சீறுகிறது கடல் . லைலாவாக அலைகிறது காற்று . பூகம்பமாக வெடிக்கிறது பூமி . இப்படிப்பட்ட இயற்கையின் கோபம் இப்போது கோபுரங்களிலும் தெறிக்கிறது .
சீகாளத்தி என்பதுதான் அந்தத் தலத்தின் பெயர் . சீ என்பது சிலந்தியையும், காளம் என்றால் பாம்பையும், அத்தி என்பது யானையையும் குறிக்கும் . இம்மூன்றும் வழிபட்டுப் பேறுபெற்ற தலமாக ஆனதால், இப்பெயர் பெற்றதாக ஐதீகம் . தென்கைலாசம் என்று இதை அழைப்பார்கள் . பெண்ணாறு ஆற்றின் கிளை நதியான ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் இந்த ராஜ கோபுரத்தைக் கட்டியவர் கிருஷ்ணதேவராயர் . பஞ்சபூத சிவ தலங்களில் வாயு தலமாக விளங்குவது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் . திருப்பதியில் இருந்து 38 கி. மீ. தொலைவில் உள்ள இந்த ராகு, கேது தோஷநிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்யப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர் . கம்பீரமான 140 அடி உயரம் ராஜகோபுரத்தில் திடீரன மேலிருந்து கீழ் வரை விரிசல் ஏற்பட்டு, 26 . 05. 2010 அன்று இரவு 8. 00 மணிக்கு தரைமட்டம் ஆனது அந்த திருக்கோயில் . அந்த ராஜகோபுரம் இடிந்து விழும்போது, அருகில் இருந்த வீடுகளும் கடைகளும் நொறுங்கின . ஆனால், அடிவாரத்தில் இருந்த கிருஷ்ணதேவராயரின் சிலை மட்டும் அப்படியே இருந்தது . சிதறிக்கிடக்கும் கோபுரச் சிதறலை எடுத்துச் செல்ல பக்தர்கள் கூட்டம் முண்டியடிக்கிறது . உள்ளே புதையல்கள் இருக்கலாம் என்ற வதந்திக்கும் பஞ்சம் இல்லை .
அதைப் பார்வையிட வந்த ஆய்வாளர் வெங்கட கிருஷ்ணப் பிரசாத்திடம் கேட்ட போது, " ஞான பிரசுரனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயில், 1988 -ம் ஆண்டு இந்தக் கோபுரத்தில் இருந்த சிற்பத்தில் சிறு உடைப்பு ஏற்பட்டு, 15 லட்சம் செலவு செய்து மராமத்துப் பார்த்தார்கள் . ஆனால், அது கடந்த 25 .05. 2010. அன்று இரண்டாகப் பிளவுபட்டது என்றார் .
ஜோதிடரும் ஆய்வாளருமான டாக்டர் வித்யாதரனைக் கேட்டபோது, " இக்கோயில், ஒருபக்கம் மலையும் , இன்னொரு பக்கம் ஆறும் இருக்கும் பிரசித்திபெற்ற அமைப்பு பெற்றது . இதுபோன்ற ஸ்தலங்களில் திருக்குளம் இருக்க வேண்டும் . வரும் பக்தர்கள் பாவங்களைக் கழுவுவார்கள் . அந்தத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, புது நீர் பாய்ச்சப்படும் . அதாவது தோஷங்கள் தேங்காமல் வெளியேற்றப்படும் . அப்படிப்பட்ட திருக்குளம் இங்கு இல்லை . அதனால்தான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது . கோபுரக் கலசம் விழுந்தாலே , ஆள்வோருக்கு ஆகாது என்பார்கள் . இப்போது கோபுரமே விழுந்து இருக்கிறது . மேலும் இதனுடைய பிரதிபலிப்பு 80 கி. மீ. தூரம் வரை இருக்கும் என்பது ஐதீகம் " என்றும் பயமுறுத்துகிறார் .
கோபுர தரிசனத்தைப் பாப விமோசனமாகச் சொல்வார்கள் . அதையே பாவம் செய்ய விட்டுவிடக் கூடாது !
---- தினகரன் , 25 , 26. 05.2010 .
---- ஆனந்தவிகடன் .. விகடன் ,09. 06. 2010.
கண்ணப்பரை ஆட்கொண்டு அருள் புரிந்த இடம்; அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடப் பெற்ற ஸ்தலம்; நக்கீரர் சாப விமோசனம் பெற்று ' கயிலை பாதி, காளத்தி பாதி ' என்று பாடிய இடம்; ஆதிசங்கரர் விஜயம் செய்து, அம்மன் ( ஞானபிரஸுனாம்பிகை ) சந்நதியில் ஸ்ரீ சக்ரம் பதித்த இடம்; காஞ்சிப் பெரியவர்களின் திருப்பாதம் பட்ட இடம்; பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுத் தலம்.... இப்படிப் பல சிறப்புகளைப் பெற்றிருப்பது ஸ்ரீ காளஹஸ்தி க்ஷேத்திரம் .
---- ஆனந்தவிகடன் .. விகடன் ,16. 06. 2010.
No comments:
Post a Comment