' ஸ்பேஸ் டூர் ' என்பது 1990 - ம் ஆண்டுகளின் இறுதியில்தான் உருவானது . டென்னிஸ் டிடோ என்கிற அமெரிக்கர்தான் 2001 -ல் முதன்முதலா ஒரு ஸ்பேஸ் டூரிஸ்டாக விண்வெளியில் 9 நாட்கள் தங்கியிருந்தார் .
இந்த டூரில் 2 வகை இருக்கிறது . பூமியிலிருந்து கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் தூரம் வரைக்கும் போய், ஒரு இரண்டரை மணிநேரம் இருந்துவிட்டு, உடனே திரும்பி வருவது . இதில் ஜாலியான விஷயம், புவியீர்ப்பு விசை இல்லாத அந்த இடத்தில் அந்தரத்தில் மிதக்கின்ற அற்புத உணர்வுதான் . அங்கிருந்து பூமி முழுவதையும் பறவைப் பார்வையில் பார்க்கலாம் .
இன்னொருவகை டூர்... ஏற்கனவே வான்வெளியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் சில நாட்கள் இருந்துவிட்டுத் திரும்புவது .' ஸ்பேஸ் அட்வென்சர் லிமிடெட் ' என்கிற அமெரிக்க நிறுவனம், ரஷ்ய விண்வாகனங்களில் 2001 - ம் ஆண்டிலிருந்து இப்படி டூர் அனுப்பி வருகிறது . இதுவரை 8 பேர் இப்படி ஜாலியாகப் போய் வந்திருக்கிறார்கள் . அங்கே அதிகபட்சம் 15 நாட்கள் தங்கியிருக்க முடியும் . அதற்காக நாம் கட்டவேண்டிய தொகை 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் . இந்திய மதிப்பில் சுமார் 91 கோடி ரூபாய் ! நம் தலை கிறுகிறுக்க ஆரம்பித்து விட்டது .
--- மயில்சாமி அண்ணாதுரை , ' சந்திராயன் விண்வெளித் திட்ட இயக்குனர் .
--- நாச்சியாள் . அவள் விகடன் , 26. 03. 2010.
No comments:
Post a Comment