கருவறையில் உள்ள இறைவனை அபிஷேகித்த நீர் வெளியில் வந்து விழும் பகுதியில் பசுவின் முகம் போன்ற அமைப்பு இருக்கும். இதைக் கோமுகம் என்றும் கோமுகை என்றும் சொல்வார்கள். இமயமலைச் சாரலில் முக்திநாத் என்றோரு வைணவத் தலம் உள்ளது. அங்குள்ள கோவிலைச் சுற்றிலும் பசுவின் முகம் போலச் செய்யப்பட்ட 108 கோமுகைகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து எப்போதும் நீர் விழுந்து கொண்டு இருக்கும்.
பரமன் அருளால் தோன்றிய பசுக்கள்:.
ஒரு சமயம் சிவபெருமான் அருளால் நான்கு பசுக்கள் தோன்றின. சிவன் அவற்றை நான்கு திசைத் தெய்வங்களுக்கு அளித்தார். இந்திரனுக்கு சுஷிதை, எமனுக்குக் கயிலை, வருணனுக்கு ரோகிணி, குபேரனுகுக் காமதேனு என்ற பசுக்கள் தரப்பட்டன. இந்தச் செய்தி மகாபாரதத்தில் அனுசாசன பருவத்தில் உள்ளது.
--- தினமலர் பக்திமலர். மார்ச் 14, 2013.

No comments:
Post a Comment