ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் ரிஷபம், சிம்மம், தனுசு, கும்ப ராசிகளில் குரு இடம் பெற்றிருப்பது குருவளையல் எனப்படும். இதை வியாழ வட்டம் என்பர்.
குரு, ரிஷப ராசியில் இருந்தால் அவர் தலையசைத்தால் ஊர் அசையும். வெகுஜன செல்வாக்குப் பெற்றிருப்பார். சிம்ம ராசியில் இருந்தால் நடமாடும் சிங்கங்களாக வைராக்கிய நடையிடுவர். தனுசு ராசியில் இருந்தால் ராஜயோகம். கும்பராசியில் இருக்கப் பிறந்தவர்கள் ஞானிகளாகத் திகழ்வர்.
வியாழ நோக்கம்
கல்யாண வயதை எட்டிய நிலையில் 'வியாழ நோக்கம் ' இருந்தால் மளமளவென கல்யாணம் நடக்கும்.
இது என்ன வியாழ நோக்கம் ?
ஒரு ஜாதகரின் ஜனனராசிக்கு அதாவது சந்திரன் நிற்கும் ராசிக்கு 2,5,7,9,11 ம் ராசிகளில் குரு சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு குருபலன் - அதாவது, வியாழ நோக்கம் உள்ளது என்று அர்த்தம். அந்த நிலையில் திருமணப்பேச்சு எடுத்தால் போதும். இது கல்யண காலம் விரைவில் திருமணத்தை நடத்தி வைத்து விடும்.
பத்து தோஷமும் விலகும் !
ஜனன லக்னத்துக்கு 1-4-7-10ல் குரு, சுக்கிரன்,புதன் கூடியோ, பரவலாகவோ இருந்தால் அந்த ஜாதகருக்கு உரிய பத்து தோஷங்களும் பகலவனைக் கண்ட பனிபோல விலகும். பட்சி, எட்சி, தேரை, புருஷ, குழி, முட்டு, பெண், பறவை, பாலாரிஷ்டம். கருவழிந்த தோஷம் என்பவை பத்து தோஷங்களாகும்.
--- தினமலர் பக்திமலர். மே 23, 2013.

No comments:
Post a Comment