" வில்வம் ' இருக்கும் இடத்தில் செல்வம் செழிக்கும். ஒரே ஒரு வில்வத்தை உள்ளன்புடன் சிவபெருமானுக்குச் சமர்பித்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவம் தீரும் என்கிறது வில்வாஷ்டகம்.
கூவிளம் என்று இலக்கியங்களில் குறிக்கப் பெறுவது வில்வம். இதனுடன் இன்னும் நான்கு இலைகளையும் சேர்த்து ஐந்து இலைகளைப் பஞ்ச வில்வம் என்பர். கூவிளம், நொச்சி, கிளுவை, மாவிலங்கம், விளா என்பவை அவை.
சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. கிழக்கில் உள்ள முகம் தத்புருஷம், தெற்கில் உள்ளது அகோரம், மேற்கில் உள்லது சத்யோஜாதம், வடக்கில் உள்ளது வாமதேவம். மேலே ஒரு முகம் உண்டு. அது ஈசானம் எனப்படும். இந்த ஐந்து முகங்களில் இருந்து கூவிளம், நொச்சி, கிளுவை, மாவிலகம், விளா என்பவை தோன்றின. அது பஞ்ச வில்வங்களாயின என்பது வில்வமகாத்மியத்தில் சொல்லப்பட்டுள்ள செய்தியாகும்.
சிவபெருமானுக்கு விசேஷ அர்ச்சனை பஞ்சமுக அர்ச்சனையாகும். ஒரே சமயத்தில் 5 சிவாச்சாரியர் 5 வகையான பஞ்ச வில்வங்களைக் கொண்டு பூஜிப்பர். ஒரு முகத்துக்கு ஒரு இலை. இறுதியில் ஐவகையான பிரசாதங்களை நிவேதித்து ஐவர் ஒரே சமயத்தில் தீபாராதனை செய்வர். இது பஞ்சமுக அர்ச்சனை எனப்படும்.
--- புலவர் வே. மகாதேவன்.
-- தினமலர் பக்திமலர். மார்ச் 14, 2013.

No comments:
Post a Comment