கம்பித் தொடர்பு இல்லாமல் ஒரு தொலைபேசி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆசை பொதுமக்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளுக்கும் இருந்தது. முக்கியமாக மோட்டோரோலா நிறுவனமும், பெல் லாக்ஸ் நிறுவனமும் இது குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கின. வென்றது மோட்டோரோலா நிறுவனம். அந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த மார்ட்டின் கூப்பர் என்பவர்தான் கைபேசியைக் கண்டுபிடித்தார். அதன் எடை 2.5 பவுண்டு. ஒன்பது அங்குல நீளமும் 1.75 அங்குல அகலமும், 5 அடி ஆழமும் கொண்டதாக அது இருந்தது. அதில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள்தான் பேச முடிந்தது. அதற்குள் மின் சக்தி தீர்ந்துவிடும். ரீசார்ஜ் செய்ய 10 மணி நேரத்தைவிட அதிகம் தேவைப்பட்டது. 1947ல் AT&T என்ற நிறுவனம்தான் கைபேசி சேவையை வணிகமயமாக்கியது. செயின்ட் லூயி என்ற இடத்தில் விற்பனை தொடங்கியது. விரைவில் சிறுசிறு நகரங்களுக்கும் இது பரவியது. என்றாலும் 5000 வாடிக்கையாளர்களோடு இது நிறுத்திக் கொண்டது.
--தினமலர். சிறுவர்மலர். மே 17, 2013.
--தினமலர். சிறுவர்மலர். மே 17, 2013.
No comments:
Post a Comment