ஏசி தலையணை என்றவுடன் குளுகுளு காற்றை செலுத்துமோ என்று எண்ணிவிட வேண்டாம். இது, அசுத்தக் காற்றை வெளியேற்றி தூய்மையான காற்றை உள் செலுத்தும் செயல்பாட்டைக்கொண்டது.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போட்டி ஜப்பானில் நடைபெற்றது. இதில் ஆயிரத்து 700 பேர் கலந்துகொண்டனர். அவற்றிலிருந்து ஆயிரம் சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குரியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். அதில் தூங்கும்போது ஆக்சிஜனை வெளிப்படுத்தும் தலையணையும் அடங்கும். இதை சீனாவின் ஜிலின் அனிமேஷன் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த மாணவர் குயிங்ஜி தயாரித்துள்ளார்.
அலியோ என்ற செல்களால் உருவாக்கப்பட்டுள்ள இது, பார்வைக்குச் சாதாரண தலையணை போல்ட்தான் இருக்கும். ஆனால், இதன் மேல் தலைவைத்து தூங்கும்போது நாம் வெளிவிடும் கார்பன் மோனாக்சைடை உறிஞ்சிக்கொண்டு, ஆக்சிஜனை வெளியேற்றும். சுத்தமான காற்று கிடைப்பதால் தொந்தரவின்றி தூங்கலாம் என்பதோடு, தூங்கி எழுந்தபின் வழக்கத்தை விட அதிகமான சுறுசுறுப்பும், உற்சாகமும் கிடைக்கும் என்கிறார் குயிங்ஜி.
-- கர்ணா.
-- தினமலர் . வாரமலர். 12 . 05. 2013.

No comments:
Post a Comment