' மரணத்திலும் கொடுமையானது எது? ' என்று ஸ்ரீசங்கரரிடம் கேட்டான் சீடன். அதற்கு அவர், ' மூர்க்கத்துவம் ' என்றார்.
மரணம் என்றால் என்ன என்பதை முதலில் ஆய்ந்து அறியவேண்டும். உடலை விட்டு உயிர் நீங்குதல், அதன்பின் அனைத்து நாடிகளும் ஒடுங்குதல் மரணம் என்று சொல்லப்படும். அந்தநிலையில் உடலைப் பிணம் என்று சொல்கிறோம். மூர்க்கட்த்துவம் உடைய மனிதன் பிணத்திலும் இழிநிலையில் வாழ்பவன், கிட்டத்தட்ட நடைப்பிணம் என்றே சொல்லலாம்.
மனிதனிடம் அறியாமை இருப்பது இயல்பு. அறியாமையில் இருந்து நீங்க முயற்சிக்க வேண்டும். அறியாமை காரணமாக எடுத்த முடிவைப் பிடிவாதமாகப் பின்பற்றுபவன்தான் மூர்க்கன். இலக்கண நூல்களில் இதை ஒரு கொள்கையாகச் சொல்வார்கள். ' தான் ஆட்டி தனாது நிறுத்தல் ' என்று அதற்கு பெயர். தான் எடுத்த முடிவு தவறானது என்பதை மனசாட்சி சுட்டிக்காட்டிய பின்னாலும்கூட அந்த முடிவில் இருந்து பின்வாங்காமை மூர்க்கதுவமாகும்.
-- ஞான வாயில் .தினமலர் . பக்திமலர். பிப்ரவரி 21, 2013.

No comments:
Post a Comment