தமிழ்நாட்டுக்கு திண்டுக்கல் பூட்டுகள் எப்படியோ, அப்படி பூட்டு தயாரிப்பில் உலகளவில் பிரசித்தி பெற்றது கலிபோர்னியாவைச் சேர்ந்த கிவிக் செட் நிறுவனம். இவர்களது தயாரிப்பான சிக்னேச்சர் சீரிஸ் வகை பூட்டுகள் மிகவும் பிரபலமானவை. உலகின் பல நாடுகளிலும் தங்கள் மின்னணு பூட்டு தயாரிப்பு தொழிற்சாலையை நடத்திவரும் இந்த நிறுவனம், இப்போது புளூடூத் மூலம் பூட்ட திறக்கக்கூடிய மின்னணு பூட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரானுவத் தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனத்தாரால் பெருமையுடன் குறிப்பிடப்படும் இந்தப் பூட்டுகளை வீடு அல்லது அலுவலகத்தின் கதவுடன் இணைத்து விட்டால் போதும்.
அப்புறம் தூரத்தில் இருந்தாலும் புளூடூத் மூலம் உங்கள் ஐபோனில் குறிப்பிட்ட பொத்தானைத் தொட்டால் கதவு திறந்து விடும். அருகில் இருக்கும்போது விரல் தொடுகை மூலம் திறக்கலாம்.
இதன்மூலம் பயனாளர் வீட்டில் இல்லாமல் இருக்கும் நேரத்தில் உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கு போன் மூலமே கதவைத் திறந்துவிட முடியும். இந்த நவீன பூட்டின் விலை 12 ஆயிரம் ரூபாய்.
-- தினமலர் . வாரமலர் . 19 .5 . 2013.

No comments:
Post a Comment