இரண்டு சிம் வசதி கோண்ட புதிய ஸ்மார்ட் போன்
இந்திய மொபைல் சந்தையில் நோக்கியா மொபைல்கள் தனக்கென தனி இடம் பிடித்துள்ளன. பயன்படுத்துவோருக்கு எந்தச் சிரமமும் அளிக்காத வகையில் யூஸர் ஃபிரண்ட்லி மொபைல்களைச் சந்தையில் புழக்கத்தில் விடுவதே நோக்கியா நிறுவனத்தின் வழக்கம். இதனால் எளிதில் வாடிக்கையாளர்களைத் தம் பக்கம் திருப்பிவிடுகிறது அந்நிறுவனம் என்கிறார்கள் தகவல் தொடர்புத் துறையினர். இந்நிலையில் நோக்கியாவின் புதுவரவான டூயல் சிம் லூமியா 630 மொபைல் அடுத்த வாரம் விற்பனைக்கு வர இருக்கிறது.
விரைவு, துல்லியம், ஆற்றல் ஆகிய மூன்று பண்புகள் இந்த லூமியா 630 மொபைலைத் தனித்துக் காட்டும் என்கிறது நோக்கியா நிறுவனம். விண்டோஸ் போன் 8.1 மென்பொருள் இந்த மொபைலை இயக்குகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இரண்டு சிம் மொபைல்களுக்கு பெரிய வரவேற்பு இருப்பதால் லூமியா 630 மொபைலும் நுகர்வோரைக் கவரும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் சந்தையில் அடுத்த வாரம் அறிமுகமாகும் லூமியா 630. சிங்கிள் சிம் செட்டின் அடிப்படை விலை 9,500 ரூபாய் என்றும், டூயல் சிம் செட்டின் அடிப்படை விலை 10,000 என்றும் தெரிகிறது.
4.5 அங்குல அகலம் கொண்ட திரை கொண்ட லூமியா 630 -ன் சேமிப்புத் திறனை 8 ஜிகாபைட் வரை விஸ்தரித்துக்கொள்ள இயலும். 512 மெகாபைட் வேகத்தில் இயங்கும் ராம் கொண்ட இதில் 5 மெகா பிக்ஸல் திறனுடைய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒளிரும் பச்சை, அட்டகாச ஆரஞ்சு, கவர்ச்சிமிகு கறுப்பு, பளிச்சிடும் வெள்ளை ஆகிய நிறங்களில் இந்த மொபைல் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடுதிரை கொண்ட இந்த ஸ்மார்ட் போனைத் தொட்டுப் பார்க்கத் துடிக்கும் விரல்களும் மனமும் அடுத்த வாரம் வரை பொறுமை காக்க வேண்டும்.
-- ராகு. இளமை புதுமை.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், மே 12, 2014.