இனி, சாப்பாட்டை குடிக்கலாம்.
இன்றைய வேகமான உலகில், சிலர் எப்போதும் அலுவல், பணி என்றிருப்பர். சாப்பிடக்கூட நேரம் இருக்காது. அவர்களுக்காகவே வாகனத்தில் பயணித்துக் கொண்டே குட்டிக்கக்கூடிய உணவை பின்லாந்து நாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.
ஹெல்சின்கியை சேர்ந்த இந்நிறுவனம் இந்த குடிக்கும் சாப்பாட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. மனிதனுக்கு அன்றாட தேவையான சத்துக்கள் இதில் அடங்கியிருக்குமாம். அம்பரானைட் என்ற பெயரில் ஒரு பவுடராக இது அறிமுகமாகி உள்ளது. இதை குடிநீருடன் கலந்து பருகலாம். அல்லது மில்க் ஷேக் போல மீல் ஷேக் ஆகவும் பிளண்டரில் போட்டு எடுத்து குடிக்கலாம். இதில் ஓட்ஸ், ஸ்பினாக் உள்ளிட்ட பல சத்துக்கள் கொண்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மிக்கோலோ ஐகோலா கூறுகையில், "ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட அதே சமயம் சாப்பிடக்கூட நேரம் இல்லாத அளவுக்கு பிசியாக இருக்கும் நபர்களுக்கு வசதியாக இந்த டிரிங்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் செயற்கையான சேர்ப்பு பொருள் எதுவும் சேர்க்கப்படவில்லை" என்றார்.
போகிற போக்கை பார்த்தால் காலை டிபன் முதல் இரவு உணவு வரை அனைத்துமே பாட்டிலில் விற்பனைக்கு வந்துவிடும்போல !
-- தினமலர். ஞாயிறு, மே 11, 2014.
No comments:
Post a Comment