Sunday, June 12, 2016

பந்தபாசம்.

   "பந்தபாசம் என்பது மனித இனத்துக்கே சொந்தமானதா?"
     "அப்படியும் சொல்ல முடியாது.  அது அனைத்து ஜீவராசிகளுக்கும் சொந்தமானது.  கடந்த வாரம் பெண் யானை ஒன்று குண்டேரி பள்ளம் அணையில் தண்ணீர் குடித்துவிட்டுச் சென்றபோது சுருண்டுவிழுந்து இறந்தது.  மருத்துவர்கள் வரத் தாமதமானதால் பிரேதப் பரிசோதனைக்காக இலை தழைகளைக் கொண்டு மூடிவிட்டு, அருகில் உள்ள காவல் கோபுரத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர் வனத் துறையினர்.  இரவு கூட்டம் கூட்டமாக குண்டேரி பள்ளம் பகுதிக்கு யானைகள் வந்து, இறந்துகிடந்த யானை மீது இருந்த இலை தழைகளை அகற்றிவிட்டு, அதைத் தட்டியெழுப்ப முயற்சித்தன.  கண்ணீர்விட்டன.  இந்தப் பாசப் போராட்டம் விடிய விடிய நடந்தது.  விடிந்ததும் அருகில் புதர்களில் மறைந்து நின்று பிரேதப் பரிசோதனை நடைமுறைகள், பொது மக்கள் அஞ்சலி, அடக்கம் வரையில் அனைத்து சம்பவங்களும் அரங்கேறும் வரை பார்த்துக் கண்ணீர்விட்டன!  இதை எப்படி எடுத்துக் கொள்வது?"
-- சுப்பு வேதையா சித்திரவேலு,  கருப்பம்புலம்.  ( நானே கேள்வி... நானே பதில்! ) பகுதியில்.
-- ஆனந்த விகடன். 12-6-2013.  

No comments: