Wednesday, June 15, 2016

கூகுளின் கான்டாக்ட் அலென்ஸ்!

  கூகுள் நிறுவனம் காமிராவுடன் கூடிய கான்டாக்ட் லென்ஸை தயாரித்துள்ளது.  காமிரா பார்வைக்குக் குறுக்கே நிற்காமல், லாவகமாக லென்ஸின் ஓரத்தில் உள்ளது.  நமது மூளைஒரு பொருளை அறிவதற்கு முன்பாகவே இந்த லென்ஸ் அறிந்து கொண்டு மூலைக்குத் தகவலை அனுப்பி வைக்கும்.  மனித முகங்களைஅங்கீகரித்தல், இரவு நேரப் பார்வை என எல்லா அம்சங்களும் இந்த லென்ஸ் மூலம் ஒருவர் பெற முடியும்.  முன்னால் இருக்கும் வாகன, மனிதப் போக்குவரத்துகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும்.  அதனால், பார்வை குறைபாடுள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தச் சூட்டிகை லென்ஸ் ஒரு பொக்கிஷமாகும்.
      இதை ஒரு காவலர் மாட்டிக் கொண்டால், கூட்டத்தில் இருக்கும் முகத்தில் எது திருடனின் முகம் என்று அடையாளம் காணமுடியும்.  அதேபோல், ஆயுதங்கள், கத்திகபடாக்களையும் காட்டிக் கொடுத்துவிடும்.  இராணுவ வீரர்களுக்கும் தீ அருகில் வர இருப்பதைக் காட்டிக் கொடுக்கும்.  காட்டுத்தீயாக இருந்தாலும் அதனூடே பார்ப்பதற்கும் வழிவகை செய்யும்.  கண்ணுக்குள் வயர்லெஸ் கருவி வைத்துக் கொள்வது சரியா என்றும் ஆராய்ந்து கொண்டுருக்கிறார்கள்.  இது பொது மக்கள் உபயோகத்திற்கு எப்பொழுது வரும் என்று இப்பொழுது சொல்ல முடியா விட்டாலும், மனித இனம் நினைத்துப் பார்க்க முடியாத தொழில்நுட்ப வளர்ச்சி இதோ பிறந்துவிட்டது.!
-- தி.சு.பா.  தொழில் நுட்பம்.
--  கல்கி இதழ்.  மே 2014.
-- இதழ் உதவி : கனக. கண்ணன்,  செல்லூர். திருநள்ளாறு. 

No comments: