புண்ணிய தீர்த்தங்கள் சங்கமம் கண்டுபிடிப்பு.
நம்நாட்டில் புண்ணிய தீர்த்தங்களில் திருப்பதி மலை ஏழுமலையான் கோயில் திருக்குளமான சுவாமி புஷ்கரணி முக்கியமானது. சுவாமி புஷ்கரணியின் பெருமைகளை 'புஷ்கர ஸ்நானம், வராக, வெங்கண்ண தரிசனம், ஜென்ம தன்யம்' என புராணங்கள் கூறுகின்றன.
பலவிதமான பிரச்னை பிரச்னைகளுக்கு தீர்வு காண திருப்பதி மலைக்கு பக்தர்கள் வந்தால் போதும் என்றும், திருமலை சுவாமி புஷ்கரணியில் புனித நீராடி , அருகில் அமைந்துள்ள வராக சுவாமியை முதலில் தரிசித்து, பின்னர் வெங்கடேஸ்வர சுவாமியை தரிசித்து கர்ம வினைகளிலிருந்து விடுதலை பெறலாம் என்பது இதன் பொருள்.
திருப்பதி மலையில் 66 ஆயிரம் கோடி புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லா தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராட இயலாது. எனவே, இறைவனின் ஆணைக்கு உட்பட்டும், கலியுகத்தில் பக்தர்களின் பாவங்களைப் போக்குவதற்காகவும், ஏழுமலையான் கோயில் அருகில் அமைந்துள்ள திருக்குளமான சுவாமி புஷ்கரணியில் எல்லா தீர்த்தங்களும் சங்கமம் ஆகின்றன என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு எடுத்து, சமீபத்தில் திருக்குளத்தை சுத்தம் செய்தது. அப்போது, புஷ்கரணியில் ஏராளமான புண்ணிய தீர்த்தங்கள் சங்கமிப்பதை நிபுணர்களின் உதவியுடன் தேவஸ்தானம் கண்டுபிடித்தது. மேலும், தீவிர முயற்சி செய்து, புண்ணிய தீர்த்தங்கள் சங்கமம் ஆவது தொடர்பான புகைப்படங்களை வெளியிடவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
-- தினமலர். 30-4-2014.
-- இதழ் உதவி : M.மணிகணட குருக்கள், அம்பகரத்தூர்

No comments:
Post a Comment