காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைக்கு புதிய கருவி.
காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் வாய்ப்பகுதி திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக வாய்ப் பகுதியில் வைக்கப்படும் மவுத் ஹேக் எனும் கருவியை அசையாமல் பொருத்துவதற்காக 3 கம்பிகளால் இணைக்கப்பட்ட ஸ்டாண்ட் ( ஹோல்டர் ) பயன்படுத்தப்படும். நோயாளி அசையும்போதோ அல்லது ஏதாவது ஒரு அசைவின்போதோ ஸ்டாண்ட் விலகிவிடும். அப்போது, நோயாளியின் வாய்ப் பகுதி திடீரென மூடிக்கொண்டு அறுவை சிகிச்சை செய்வதில் சிரமம் ஏற்படும்.
இத்தகைய சிரமத்தைப் போக்கும் விதமாக புதுக்கோட்டை முத்து லெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் எம்.பெரியசாமி கண்டுபிடித்துள்ள மவுத் ஹேக் ஹோல்டர் எனும் கருவிக்கு அவரது பெயரைச் சேர்த்து பெரிஸ் மவுத் ஹேக் ஹோல்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
"காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சைக்கு என தற்போதுள்ள கருவியைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இந்தக் கருவியை வயது பேதமில்லாமல் 1 எம்.எம். அளவுக்கு துல்லியமாக நகர்த்தலாம். பக்கவாட்டில் இருக்கும் இரண்டு ஸ்குரூ மூலம் இறுக்கி வைத்தால் விலகாது. அச்சமின்றி அறுவைச் சிகிச்சை செய்யலாம். மருத்துவர்களுக்கும் , நோயாளிகளுக்கும் சிரமம் இருக்காது. தற்போது பயன்படுத்தப்படும் கருவியின் விலை ரூ.1000. நான் வடிவமைத்துள்ள பெரிஸ் கருவி ரூ. 500-க்கு கிடைக்கும். இக்கருவி தொடர்பான தகவல்களுக்கு 97509 69955 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றும் கூறினார் எம். பெரியசாமி.
-- கே.சுரேஷ். பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், ஏப்ரல் 30, 2014.

No comments:
Post a Comment