Sunday, June 5, 2016

களைக்கொல்லி

 "இப்போ களைல்கொல்லி மெஷின், களைல்கொல்லி மருந்துன்னு விவசாயத்தில் களைகளுக்கு செலவு செய்யுறோம்.  உண்மையில் இங்கு இருப்பதெல்லாம் நம்முடைய களைகள் இல்லை.  வெளி நாட்டிலிருந்து வந்த களைகள்தான்.  குறிப்பா தோல் அரிப்பு, ஆஸ்துமா அலர்ஜியை உண்டாக்கும் வெட்ட வெட்ட வளரும் பார்த்தீனிய செடி நம் நாட்டுக்கானது அல்ல.  அதை ஒழிக்க எளிய வழி நாம் துத்திச் செடியை வளர்த்தாலே போதும்.  அந்தப் பகுதியில் பார்த்தீனியம் தலைக்காட்டாது.
     மேற்கு தொடர்ச்சி மலை மீது இருந்த தமிழ் தாவரங்களை அழித்து சவுக்கும் தைலமரமும், சீமை கருவேலமும் வளர நாம் வழிவகுத்ததால்தான் நமக்கு மழை பொய்த்துப் போனது.  இதை நான் சொல்லல, அமெரிக்க விவசாயக் கழகம் சொல்கிறது.
     ஊஞ்சலூர் என்ற பெயருக்குப் பின்னால் குறிஞ்சால் என்ற தாவரம் இருக்கு.  இந்த மரத்திலிருந்து பெறப்படும் மரக்கரி சக்திவாய்ந்தது. இரண்டாம் உலகப் போரின்போது குறிஞ்சால் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட கரியைக்கொண்டுதான் தென்னிந்திய ரயில்வேயின் வண்டிகள் ஓடின.  இப்போ அதை யாரும் கண்டுக்கவேயில்லை."
-- ஆர்.கண்ணன், படிவீரன் பட்டி.
-- கல்கி இதழ்.  மே 2014.
-- இதழ் உதவி : கனக. கண்ணன்,  செல்லூர். திருநள்ளாறு.

No comments: