* வித்தியாசமாக பஜ்ஜி செய்ய ஒரு ஐடியா... பீன்ஸ்களை ஒரு அங்குல நீளத்துக்கு வெட்டி, உப்பு, மிளகாய்த்தூள் கலந்த சூடான
தண்ணீரில் போட்டு வையுங்கள். வெந்நீர் ஆறியதும், பீன்ஸ் துண்டுகளை எடுத்து பஜ்ஜி மாவில் தோய்த்துப்
பொரித்தெடுங்கள். டேஸ்ட் அருமையாக இருக்கும்.
* உங்களிடம் உள்ள அரிசியில் சாதம் வடித்தால் நிறம் மங்கலாக இருக்கிறதா? அரிசி வேக வைக்கும்போது தண்ணீருடன்
சிறிது கெட்டியான மோர் அல்லது பால் கலந்து விடுங்கள். சாதம் வெண்மையாகக் கிடைக்கும்.
* இட்லி மாவு புளித்து விட்டாலோ அல்லது மாவு குறைவாக இருந்தாலோ, ஒன்றிரண்டு பிடி வடித்த சாதத்துடன் பால் சேர்த்து
மிக்ஸியில் மசியுங்கள். இதை இட்லி மாவுடன் கலந்து, மிதமான தீயில் தோசை வார்த்துப் பாருங்கள். பேப்பர் ரோஸ்ட்
போல பிரமாதமாக இருக்கும்.
* இஞ்சி டீ தயாரிக்கும்போது, இஞ்சியை நசுக்கிப் போட கஷ்டமாக இருக்கிறதா...? கடையில் கிடைக்கும் இஞ்சி முரப்பாவை
வாங்கி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். டீ தயாரிக்கும்போது, இதில் ஒரு துண்டை சேர்த்தால் போதும்.
சர்க்கரையை சிறிது குறைவாகச் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான இஞ்சி டீ சுலபத்தில் தயார்.
-- வாசலிகள் பக்கம். விஜயலட்சுமி ராமாமிர்தம்.
-- அவள் விகடன். 26-2-2010.
No comments:
Post a Comment