Thursday, September 29, 2016

எஸ்.எம்.எஸ்.

"சமீபத்தில் ரசித்த ஒரு எஸ்.எம்.எஸ்.!"
"பர்ஸில் இருக்கும் பணத்தை எல்லாம் பிடுங்கிக்கொண்டு, புது பர்ஸை இலவசமாகத் தருகிறார்கள் நகைக்கடைக்காரர்கள்!"
-- கா.முத்துச்சாமி, ராமநாதபுரம்.
" முட்டை உடைந்தால் ஜனனமா... மரணமா?"
"உள்ளிருந்து உடைந்தால் ஜனனம், வெளியிலிருந்து உடைந்தால் மரணம்!"
-- தீ,அசோகன், சென்னை.
"மேம்போக்கான புத்திசாலித்தனம் பிரயோஜனப்படாது என்பது உண்மையா?"
"ஆமாம்... ஆமாம்! குளிர்ப் பிரதேசங்களில் வசிக்கும் எஸ்கிமோக்களுக்கு ஃபிரிட்ஜ் விற்க முடியாது; சிரபுஞ்சியில் குடிதண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது என்று சொன்னால், 'ஆமாம்... அங்கே ஏற்கனவே குளிராக இருக்கும். இங்கே வருஷம் முழுக்க மழை அடிச்சு ஊத்துதே! என்றுதான் மேம்போக்காக யோசிக்க வைக்கும். ஆனால், அவை இரண்டுமே சாத்தியம். எப்படி? எஸ்கிமோக்கள் உணவுப் பொருட்கள் உறைந்து விடாமல் இருக்க, அவற்றை ஃபிரிட்ஜில் வைக்கத்தான் செய்வார்கள். சிரபுஞ்சி உயரமான பாறைகளில் அமைந்திருக்கும் ஊர். அங்கு அடித்துப் பெய்யும் மழை அனைத்தும் வடிந்து பக்கத்தில் உள்ள பங்களாதேஷுக்குப் போய் விடும். ஆகையால் அங்கும் குடிநீருக்குப் பஞ்சம்தான். இதைத் தெரிந்துகொள்ள நுனிப்புல் மேய்ச்சல் சாத்தியம் இல்லைதானே!"
-- அ.ஷண்முக சுந்தரம், பெங்களூர்.
-- நானே கேள்வி...நானே பதில் !
-- ஆனந்த விகடன். 3- 8- 2014.

No comments: