1. உலகின் மிக உயரமான அருவி எந்த நாட்டில் உள்ளது?
-- நயாகரா ஒரு மிக அகலமான அருவியே தவிர, உயரமான அருவி அல்ல. தவிர அது மூன்று அருவிகளின் தொகுப்பு.
மேலும் அது அமெரிக்காவில் மட்டும் இல்லை. ஒன்டாரியோ, நியூயார்க் ஆகிய இரு நகரங்களுக்கும் நடுவ்ற் உள்ளது.
அதாவது கனடா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ளது. நயாகராவின் உயரம் 51 மீட்டர். இந்தியாவின்
மிகப் பெரும் அருவியான ஜோக் ( JOG ) நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இதன் உயரம் 253 மீட்டர். ஆனால்
உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி வெனிசுலாவிலுள்ள ஏஞ்ஜல்ஸ் அருவிதான். 978 மீட்டர் உயரம் கொண்டது.
2. விண்வெளிவீரரை எப்படிக் குறிப்பிடுவார்கள்?
--- மூன்று விதமாகவும் குறிப்பிடுவார்கள். அமெரிக்க விண்வெளி வீரர் என்றால் அஸ்ட்ரநாட் என்று அழைக்கிறார்கள்.
ரஷ்யாவில் காஸ்மோநாட் என்றும், சீனாவில் டைகோநாட் என்றும் அழைக்கிறார்கள்.
3. பண்டரிபுரத்திலுள்ள இறைவனை எப்படி அழைக்கிறார்கள்?
-- பாண்டுரங்கன் என்றும் விட்டலன் என்றும் அழைக்கிறார்கள். மராத்தி மொழியில் விட் என்ரால் செங்கல் என்று பொருள்.
செங்கல்மீது நின்றபடி காட்சியளிப்பதால், விட்டலன். அச்சுதன், பத்மநாபன் என்றும் குறிப்பிடுவர். அச்சுதன் என்றால்
அழிக்க முடியாதவன், நிரந்தரமானவன் என்றும், பத்மநாபன் என்றால் தன் தொப்புளில் தாமரையைக் கொண்டவன் என்று
அர்த்தம். இந்த தாமரையில்தான் பிரம்மன் தோன்றினான் என்பது நம்பிக்கை.
4. ஜுராசிக் என்றால் என்ன பொருள்?
-- சுமார் 145லிருந்து 200 கோடி வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தை ஜுராசிக் யுகம் என்று குறிப்பிடுவார்கள். ஆக
ஜுராசிக் என்பது ஒரு காலகட்டத்தைத்தான் குறிப்பிடுகிறது.
5. கலிங்கம் என்பது இந்தியாவின் எந்தப் பகுதி?
-- இன்றைய பீகார் அன்றைய மகதத்தின் ஒரு பகுதி. மகத நாட்டின் சக்ரவர்த்திதான் அசோகர். ஆனால் அவர் படையெடுத்த
கலிங்க நாடு என்பது இப்போதைய ஒடிஸா.
-- ஜி.எஸ்.எஸ். ( 1 பார்வை 3 கோணங்கள் )
-- தினமலர். சிறுவர்மலர். ஆகஸ்ட் 15, 2014.
No comments:
Post a Comment